Categories
உலகம்

இந்தியாவில் கொரோனா: 118,000 பேர் பாதிப்பு; பலி 3,583; குணமடைவோர் 40% கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் 6,088 பேருக்குத் தொற்று

Categories
உலகம்

சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது…


சீனாவின் கொவிட்-19 நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை குறைந்த அளவிலேயே உலக நாடுகளுக்கு சீனா வெளியிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நோய் குறித்த உண்மை நிலவரங்கள் தொடர்பாக சீனா வெளிப்படையாக நடந்துக் கொள்ளத் தவறியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியிருக்கிறார். கொவிட்-19 நோயின் பிறப்பிடமான வூஹானில் தற்போது பதிவாகியிருக்கும் மரண எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகம் என்று டோனல்ட் டிரம்ப் கூறுகின்றார். சீனாவின் இந்நடவடிக்கையால் தாம் மனநிறைவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். கொவிட்-19 நோய் சீனாவில் இருந்து எவ்வாறு தோன்றியது என்பதை கண்டறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமது அதிகாரிகளுக்கு டோனல்ட் டிரம்ப் கட்டளையிட்டுள்ளார். இந்த தொற்று நோயினால், சீனாவில் இதுவரை 82, 719 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 4,632 பேர் பலியாகியிருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ 710,272 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் 37,175 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெர்னாமா

Categories
உலகம்

எய்ம்ஸ் டாக்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது

Categories
Featured உலகம் தலையங்கம்

கொரோனா கிருமி ஒழிய பல ஆண்டுகள் ஆகலாம்: அச்சந்தரும் புதிய ஆய்வு முடிவுகள்

உலகின் எல்லா மூலைகளையும் எட்டிவிட்ட கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினை இப்போதைக்கு ஓயாது என்றும் அது இன்னும் பல ஆண்டுகளுக்கு, ஏன் பல பத்தாண்டுகளுக்கு மனிதகுலத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் குழு ஒன்று அச்சமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த   விஞ்ஞானிகள் அடங்கிய அந்தக் குழு, தனது ஆய்வு முடிவுகளை ‘நேச்சர் மெடிசன்’ எனும் இதழில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்படுவதற்குப் பல காலத்திற்கு முன்னரே, கொரோனா கிருமி விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றி இருக்கலாம் என்பது அந்த விஞ்ஞானிகளின் கருத்து.

“படிப்படியான பரிணாம மாற்றங்கள் காரணமாக கொரோனா கிருமி  தோன்றி இருக்கலாம். பின்னர் அது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதரைத் தொற்றுவதற்கான திறனைப் பெற்று, தீவிரமான, உயிருக்கு உலை வைக்கும் நோயாக உருவெடுத்திருக்கலாம்,” என்றார் அமெரிக்க தேசிய சுகாதார நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ஃபிரான்சிஸ் கொலின்ஸ்.

“கொரோனா கிருமி தொடர்பில் எங்களுக்குக் கிடைத்துள்ள மரபணு வரிசைத் தரவுகளை ஒப்புநோக்கும்போது, இந்த SARS-CoV-2 கிருமி இயற்கைச் செயல்முறைகள் மூலமாகவே தோன்றியது என நாங்கள் திட்டவட்டமாக தீர்மானிக்கிறோம்,” என்று கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிலையத்தின் தலைமை ஆய்வாளரான கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.

இத்தாலியில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வித்தியாசமான ‘நிமோனியா’ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அந்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜுசெப்பே ரெமூஸி. அதைப் பார்க்கும்போது, எவரும் அறிவதற்கு முன்னரே அது ஐரோப்பாவிற்கு வந்திருக்கலாம் என்பது அவரின் கூற்று.

அதேபோல, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், கடந்த ஆண்டில் புதிரானதொரு நிமோனியா பரவல் தொடர்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்களும் பதிவுசெய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“கொரோனா தொற்று குறித்த முழு விவரங்களும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த மருத்துவர்.

Categories
உலகம்

ஸ்கோட் மோரிசன் : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்

ஸ்கோட் மோரிசன் : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்

கான்பெரா – ஆஸ்திரேலிய அரசியலில் திடீர் திருப்பமாக இன்று வெள்ளிக்கிழமை ஸ்கோர் மோரிசன் ஆஸ்திரேலியப் பிரதமராக, மால்கம் டர்ன்புல்-லுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் 14-ஆம் தேதி மால்கம் டர்ன்புல் அப்போதைய பிரதமர் டோனி அப்போட்டுக்குப் பதிலாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றோடு அவரது பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வந்து, அவருக்குப் பதிலாக ஸ்கோட் மோரிசன் பிரதமராகப் பதவியேற்றார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொருளாளரான ஸ்கோட் புதிய தலைவராகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Categories
உலகம் சினிமா

இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? – சன்னி லியோனி பேட்டி

இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? – சன்னி லியோனி பேட்டி

இந்திய ஆபாசப்பட துறையை பற்றி என்ன நினைக்கிறார் சன்னி லியோன்?

சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான ‘கரஞ்சித் கௌரில்’ வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் “ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.

“இரண்டுக்கும் தைரியம் என்ற ஒற்றுமை உள்ளது” என்று சன்னி லியோனி பதிலளித்திருந்தார்.

நான் சன்னி லியோனியை மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவரிடம் உள்ள அந்த ‘தைரியத்தை’ அவரது நடை, முகம், பதில்களின் மூலம் காண முடிந்தது.

அப்போது அந்த இணையதள தொடருக்கான நேர்க்காணலை படம்பிடிப்பது சவாலானதாக இருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.

“அந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்விகள் மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், இதை மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருந்ததால்தான் அந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்” என்று சன்னி லியோனி கூறினார்.

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்தியாவில் இணையதளத்தில் மிகவும் தேடப்பட்ட நபராக சன்னி உள்ளார். பெரும்பாலான மக்கள் சன்னி லியோனியை பார்ப்பதற்கும், அவரை பற்றி தெரிந்துகொள்வதற்கும் விரும்பினாலும், அவரைப் பற்றிய தங்களது எண்ணத்தை மக்கள் ஏற்கனவே மனதில் வரைந்துவிட்டார்கள்.

இந்திய ஆபாசப்பட துறையை பற்றி என்ன நினைக்கிறார் சன்னி லியோன்?

 

“என்னைப் பற்றியும், நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றியும் நான் நேர்மையாக இருக்கிறேன். ஆனால், மக்கள் என்னுடைய கடந்த காலத்தை தொடர்புப்படுத்தி மட்டுமே என்னை பார்க்கிறார்கள். மக்களிடையே அது போன்ற எண்ணம் உருவாவதற்கு நான்தான் காரணம் என்று நம்புறேன். இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பரிணமிக்கிறார்கள், அதை மக்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்.”

தொடக்கத்தில் பாலிவுட் திரைப்படங்களில் “குத்தாட்டப் பாடலில்” நடித்த சன்னி, தற்போது சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனது சொந்த வாசனை திரவிய தயாரிப்பான ‘தி லஸ்ட்’ ஐ (இச்சை என்று பொருள் தரும் சொல்) அவர் அறிமுகப்படுத்தினார்.

வாசனை திரவிய தயாரிப்புக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அவரைப் பற்றிய கடந்தகால எண்ணத்தை மக்களிடையே மீண்டும் ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்டேன்.

அதை மறுத்த சன்னி, தனது வயதில் வாசனை திரவியத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும், தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது, இந்த பெயரையே தான் விருப்பியதாகவும் அவர் கூறினார்.

“செடுஷன் அல்லது ஃப்யர், ஐஸ் போன்ற பெயர்களைத்தான் மற்ற தயாரிப்பாளர்களும் பயன்படுத்துகின்றனர்” என்று அவர் கூறினார்.

சன்னி லியோனியின் இயற்பெயர் கரஞ்சித் கௌர் ஆகும்.

இந்திய ஆபாசப்பட துறையை பற்றி என்ன நினைக்கிறார் சன்னி லியோன்?

ஆபாசப்பட திரையில் பணியாற்றிய சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பில் ‘கௌர்’ என்ற வார்த்தை இடம் பெறுவதற்கு தீவிர சீக்கிய மத அமைப்பான, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC), அது சீக்கிய மதத்தின் முக்கிய வார்த்தைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறியதுடன், எதிர்ப்பும் தெரிவித்தது.

இது குறித்து சன்னியிடம் கேட்டதற்கு, அந்த பெயரை தனது பெற்றோர்கள் சூட்டியதாகவும், இதே பெயர்தான் தனது கடவுச்சீட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“எப்போதுமே என்னுடைய உண்மையான பெயர் கரஞ்சித் கௌர்தான். சன்னி என்ற பெயரை நான் செய்யும் தொழிலுக்காக மட்டும்தான் பயன்படுத்தினேன்” என்று மேலும் கூறினார்.

  • தான் ஆபாசப்படத் துறையில் பணியாற்றியதற்கு சன்னி லியோன் என்றுமே வெட்கப்பட்டதில்லை. மேலும், தானே விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுத்ததாக அவர் பல முறை கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் ஆபாசப்படங்களை பார்ப்பதற்கு இந்தியாவில் தடையேதும் இல்லை. ஆனால், ஆபாசமான உள்ளடக்கத்தை தயாரிப்பதற்கும்/ பகிர்வதற்கும் சட்டரீதியாக தடை உள்ளது.

உலகிலேயே ஆபாசப்படத்தை அதிகம் பார்ப்பவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்கு அடுத்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக பிரபல ஆபாசப்பட இணையதளமான போர்ன்ஹப் தெரிவித்துள்ளது.

இந்திய ஆபாசப்பட துறையை பற்றி என்ன நினைக்கிறார் சன்னி லியோன்?

இந்தியாவில் ஏன் ஆபாசப்படத் துறை அனுமதிக்கப்பட வேண்டும்?

சற்றும் யோசிக்காத சன்னி, “இதில் நான் முடிவெடுப்பதற்கு ஒன்றுமில்லை. இந்திய அரசாங்கமும், அதன் மக்களும்தான் தங்களுக்கு எது வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

ஆபாசப்படத்துறை பாலியல் உறவு சார்ந்த உரையாடல்களை இயல்பாக்க உதவுகிறதா? அமெரிக்காவில் இதுகுறித்த உங்களது அனுபவம் என்ன?

தனது தேர்வு எவர் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கூடாது என்றும், சமூகத்தின் கருத்து குடும்பங்களாலும், ஒரு பெண்ணின் கருத்து அவரை அவர்களது பெற்றோர் வளர்க்கும் விதத்தை பொறுத்தும் அமைகிறது என்றும் அவர் கூறினார்.

ஆபாசப்படத்துறையில் இணையும் சன்னியின் முடிவுக்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பெற்றோர் தன்னை ஒரு சுதந்திரமான பெண்ணாக வளர்த்ததனால்தான் தன்னால் சுயமாக முடிவுகளை எடுக்கமுடிந்தது என்று நம்புவதாக சன்னி லியோன் கருதுகிறார்.

தற்போது சன்னிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாயின் மூலம் பெற்றெடுத்தார்.

உங்களது குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் சுயமாக முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரம் அளிப்பீர்களா?

“கண்டிப்பாக, அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும், செவ்வாய் கிரகத்துக்கு செல்லவேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஆனால், தங்களது வாழ்க்கையில் முடிவுகளையும், பயணத்தையும் அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அவர் பதிலளித்தார்.

இந்திய ஆபாசப்பட துறையை பற்றி என்ன நினைக்கிறார் சன்னி லியோன்?

எனது கடைசி கேள்வி கிட்டத்தட்ட மிகவும் சங்கடமானது. சன்னி லியோனை பற்றி கரஞ்சித் கௌர் பதில் அளிக்கும் வகையில் அந்த கேள்வி இருந்தது.

உங்களது கடந்தகால தொழிலை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்க முடியுமா?

சன்னி அந்த கேள்வியை விரும்பவில்லை. ஆனால், சிந்தனை அவரது மனதை கடந்துபோனது போல் இல்லை.

அவரது கடந்தகால வாழ்க்கை முடிவுகளின் வீழ்ச்சி மற்றும் அதன் காரணமாக மக்களின் மனதில் உருவான மனப்பான்மை, உருவம் ஆகியவற்றைக் கொண்டு அவர் வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.

ஆனால், தனது அதே தைரியத்துடன், ‘என்னுடைய பொதுவான கவலைகளில் தற்போது அது இல்லை’ என்று சன்னி லியோன் கூறினார். நீண்டகாலமாக தாயாவதன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தற்போது அந்த அனுபவத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறார்.

மேலும், சரியான நேரம் வரும்போது, தனது வாழ்க்கையை பற்றி குழந்தைகளிடம் நேர்மையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.

Categories
உலகம்

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் புகுந்த நீர்; முதல்வர் ஆய்வு

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் புகுந்த நீர்; முதல்வர் ஆய்வு

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்; ஆய்வு செய்த முதல்வர்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டார்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு நடத்தியதுடன், பாதிப்படைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.

இதற்காக இன்று காலை தனது ஆய்வு பணியை பவானியில் துவங்கிய முதல்வர், நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் காவிரியாற்றின் வழித்தடத்தில் உள்ள கரையோர பகுதிகள் பல இடங்களிலும் சேதமடைந்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையினால் பவானி மற்றும் காவிரி ஆறுகளில் ஒரே சமயத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 205 ஹெக்டேர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்களும், 404 ஹெக்டேர் பரப்பளவிற்கு தோட்ட பயிர்களும் என 609 ஹெக்டேர் பரப்பளவிற்கு நடப்பாண்டு காவிரி ஆற்றின் வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 47 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்; ஆய்வு செய்த முதல்வர்

ஆய்வுக்கு பின் தமிழக முதல்வர் கூறும் போது, பவானி இரு ஆறுகள் சேரும் இடம் என்பதால் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ளவர்கள் வீடு கட்டிதர கோரிக்கை வைத்துள்ளதாகவும், இவர்களுக்கு பாதுகாப்பான அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குடிமராமத்து பணிகள் பொறுத்த வரையில் 328 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிபாளையம் பகுதியில் 7 முகாமில் ஆயிரம் பேர்களும், குமாரபாளையத்தில் 8 முகாம்களில் 2 ஆயிரத்து 599 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே இவர்களுக்கான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான் பால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாராபாளையம் ஆற்றங்கரையோரத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 849. இதில் பகுதி சேதம் 509, முழுவதும் பாதிக்கப்பட்ட வீடுகள் 340. இவ்வாறு வீடுகளில் நீர் புகுந்தும், வீடுகள் நீரில் மூழ்கியும் உள்ளன.

இவ்வாறான பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு உடைகள் உட்பட 23 வகையான பொருள்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தற்போது அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தின் அளவை கொண்டே வெளியேற்றத்தின் அளவும் மாறுபடும் என்றார்.

தற்போது 2 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்தும், பவானி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் என 2 லட்சத்து 1 5 ஆயிரம் கன அடி நீர் பவானியை வந்தடையும், இந்நிலை நீர்வரத்தின் அளவை பொருத்து மாறுபடும் என்றார்.

ஈரோட்டில் வெள்ளம்: கிராமங்களில் உட்புகுந்த நீர்; ஆய்வு செய்த முதல்வர்

மேலும், கடைமடை விவசாயிகளுக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீர் கிடைக்கும், தற்போது திறக்கப்படும் 25, 500 ஆயிரம் கன அடி நீர் நாற்று விடுவதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், கடைமடை பகுதியை ஆய்வு செய்ய 9 இந்திய ஆட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், உள்ளூர் ஆறுகளை இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மழையினால் வீணாகும் நீரை சேமிக்கும் பொருட்டு, 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வுப்பெற்ற கண்காணிப்பு பணியாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்படுள்ளதாகவும் , இவர்களின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தடுப்பணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறாக நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக முதற்கட்டமாக 292 கோடி ரூபாய் ஒதுக்கி 62 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன், தற்போதைய வெள்ளத்தால் அதிக அளவு நீர் வந்தாலும , பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories
Featured உலகம்

தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்”

  • தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்” 

 

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது. குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான “பீடோ ஃபைலிக்”மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது. அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன

நம் நாட்டில் மும்பை ;கோவா; புனே;டெல்லி;பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள் “நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.

உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள். ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.

இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன. அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம். கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.

.

தமிழகத்தில் சென்னை – வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.

ஆண்குழந்தைகளும்  பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள் குழந்தைகள்தொலைந்துவிட்டால்…நாம் என்ன செய்ய வேண்டும் விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர். எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள். வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள் . இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்

.

கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்

எந்த கடுமையான சட்டமும் யாரையும் கட்டுப்படுத்தாது. ஏனென்றால் நம் நாட்டில் சட்டத்திற்குள் ஓட்டை இல்லை ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கிறது. நம் குழந்தைகளை முடிந்த வரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

.இது அரசியல் பதிவு அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த Group active members எல்லாருமே இந்த பதிவை படிக்கனும் தங்கள் கருத்துக்களையும் குழந்தைகளின் பாதுக்காப்பிற்கான ஆலோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

– ஜி.அர்ச்சனாLLM. , PGDFL. , MBA. , DHE. ,

அரசு சிறப்பு குற்றப் பொது வழக்கறிஞர்

மாவட்ட விரைவு வழி மகளிர் நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டம்

Categories
உலகம் பொக்கிஷம்

வாஜ்பேயி: தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது?

வாஜ்பேயி: தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது?

  • ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி
 

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். 

அகில இந்திய அளவில் மூத்த தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. கிட்டத்தட்ட அவரது வயதை ஒத்த வாஜ்பேயியும் வியாழக்கிழமைநம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். இது மனதிற்கு பெரும் வேதனையை தருகிறது.

பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பேயி ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பேசக்கூடியவர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப் பற்றி சொல்லும் ஆவணங்களாக விளங்குகின்றன.

அயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரமும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தன. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறவர்கள்கூட வாஜ்பேயி அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள். Right Man in the Wrong Party (தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர்) என்று பலர் இவரைச் சொல்வதுண்டு.

தன் இளமைக் காலத்தில் இவரும் எல்.கே. அத்வானியும் தில்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு, அரசியல் பணிகளை மேற்கொண்டார்கள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத் துறை அமைச்சராக வாஜ்பேயி இருந்தார். அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீரமைத்தவர் அவர்.

1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி “எங்கள் துர்கா தேவியே” என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு அமைந்தன.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

தில்லியில் வைகோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன், எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பேயி.

ஆனால், வைகோ “வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பேயி, ” ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வர்த்தகத்துறை அமைச்சராக இல்லையா…” என்றபோது, வை.கோ. வேண்டவே.. வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். ஒரு கூட்டணிக் கட்சியை ஒரு பிரதமர் எப்படி மதித்தார் என்று கண்கூடாக அப்போது பார்த்தேன்.

வாஜ்பேயி அவர்களது ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் மாறுதல் குறித்த நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன்.

பின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், பொதுத்தேர்தல் வந்தது. இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறு விஷயம்.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

கடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ. நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைக்கு பிரதமர் வாஜ்பேயி சென்னைக்கு வருகை தந்திருந்தபோது, விமான நிலையத்தில் வைகோவும் கலைஞரும் சந்தித்தார்கள். 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் கலைஞர் அவர்களை அன்றைக்குத்தான் சந்தித்தார்.

பிரதமர் வாஜ்பேயியின் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரானார். அப்போது சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தான் எழுதிய கடிதத்தை வைகோ என்னிடமிருந்து வாங்கி பிரதமரிடம் “சேது சமுத்திர கேனால்….” என்று சொல்லி கொடுக்க முயற்சித்தார். அப்போது தன் கைகளைக் காட்டி, “கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே… இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்” என வைகோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார் வாஜ்பேயி.

திட்டமிட்டவாறு அன்று மாலை எழுச்சி மிகுந்த கூட்டம் நடைபெற்றது. கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தன. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பேயி இதைப் பார்த்தவுடன் வைகோவிடம் “சாப்பிடலாமா” என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின், சமையல்காரரைப் பார்த்து “நன்றாக இருந்தது” என்று சந்தோஷத்தோடு பாராட்டவும் செய்தார்.

இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாஷ்சிங் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் “நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

ஒரு முறை தீப்பட்டித் தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வைகோ அவர்கள் சென்றிருந்தார். அப்போது அவர் சிவகாசி தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.

பிரதிநிதிகளை சந்திக்கவந்த வாஜ்பேயி அவர்கள் அனைவரோடும் தேநீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருந்த நிலையிலும் இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். இவர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் .

சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக் குழு அமைத்தது, நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற தங்க நாற்கரச் சாலைகளை உருவாக்கியது போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர்.

1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயியும் கலந்து கொண்டார். அப்போது அவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹுகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன். அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பேயி “இட்லி, தோசை சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.

காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், “எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பேயி. மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பேயிடமும், பஹுகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.

வாஜ்பேயி அவர்கள் தில்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொருத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.

Categories
உலகம்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அதிபர் டிரம்ப்!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன், ஆகஸ்ட்.16- அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், கறுப்பினத்தவரான தனது முன்னாள் உதவியாளரை “நாய்” என குறிப்பிட்டது பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிரம்பின் முன்னாள் உதவியாளரான ஓமரோசா மனிகோல்ட் நியூமன் என்ற பெண் தானும் அதிபர் டிரம்பும் உரையாடும் தொலைபேசி உரையாடல் பதிவொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இத்தொலைபேசி உரையாடல் அமெரிக்காவில் என்பிசி தொலைக்காட்சியில் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து டிரம்ப், ஓமரோசாவை ‘நாய்’ எனக் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அழுது புலம்பும் பைத்தியக்கார பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால், அது சரியாக அமையவில்லை. அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிகச் சிறப்பான செயல் என அவர் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கறுப்பினத்தவரை இழிவு படுத்துவதே டிரம்ப்பிற்கு வழக்கமாக உள்ளது எனவும் இந்த விவகாரத்தை வைத்து இனவெறிப் போரைத் தூண்ட டிரம்ப் முயற்சிக்கிறார் எனவும் ஓமரோசா தெரிவித்துள்ளார்.

மேலும் கறுப்பினத்தவருக்கு எதிரான அவரது கருத்து திரும்ப பெற வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.