சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது…

0
136


சீனாவின் கொவிட்-19 நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை குறைந்த அளவிலேயே உலக நாடுகளுக்கு சீனா வெளியிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நோய் குறித்த உண்மை நிலவரங்கள் தொடர்பாக சீனா வெளிப்படையாக நடந்துக் கொள்ளத் தவறியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியிருக்கிறார். கொவிட்-19 நோயின் பிறப்பிடமான வூஹானில் தற்போது பதிவாகியிருக்கும் மரண எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகம் என்று டோனல்ட் டிரம்ப் கூறுகின்றார். சீனாவின் இந்நடவடிக்கையால் தாம் மனநிறைவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். கொவிட்-19 நோய் சீனாவில் இருந்து எவ்வாறு தோன்றியது என்பதை கண்டறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமது அதிகாரிகளுக்கு டோனல்ட் டிரம்ப் கட்டளையிட்டுள்ளார். இந்த தொற்று நோயினால், சீனாவில் இதுவரை 82, 719 பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 4,632 பேர் பலியாகியிருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ 710,272 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் 37,175 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெர்னாமா

Your Comments