யொங் பெங் அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பொங்கல் விழா
Yong Peng Pongal Festival organized by Yong Peng Hindu Charity Forum at Arulmigu Sri Maha Mariamman Temple
Date : 20 Feb 2025 News By: Maniam Young Peng
அண்மையில் யொங் பெங் அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் யொங் பெங் இந்து நற்பணி மன்ற ஏற்பாட்டில் பொங்கல் விழா மற்றும் தேவாரப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இருபதுக்கு மேற்ப்பட்ட குழுக்கள் பொங்கல் வைத்த நிலையில், நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேவாரப்போட்டியில் பங்குப்பெற்றனர்.
இந்து நற்பணி மன்றத் தலைவர் சிவஸ்ரீ தே.ச.சசிதரன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,(GSR TOTAL LOGISTICS (M) SDN.BHD) தொழில் முனைவர் திரு.மோகன் குமார் ஸ்ரீ நந்தினி தம்பதியினர் சிறப்பு வருகை புரிந்து பரிசுகளை எடுத்து வழங்கினர்.
சாஆ இந்து சங்க பேரவைத் தலைவர் திரு . சிவசுப்ரமணியம், இந்து தர்ம மாமன்றத்தின் சமய ஆசிரியர்,பெரியவர் திரு .முனியாண்டி வருகை புரிந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மன்ற கௌரவ செயலாளர் திருமதி. ஷாமினி அனைவருக்கும் நன்றி கூறினார்.