டத்தோ டாக்டர் அ.சந்திரன்
சாதனை மாமனிதர்- 2
-------------------------------
டத்தோ டாக்டர் அ.சந்திரன் நாயுடு
சாதனைகளை சாதித்த சரித்திர
நாயகன் அ.சந்திரன் நாயுடு.
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம்.
நமது எண்ணம் தான் நம்முடைய வாழ்வை உயர்த்துகிறது.
ஒரு திட்டமிடல், நம்முடைய எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றலை
கொண்டிருப்பதை உணர்ந்தாலே
போதும் இலக்கை எட்டி விடலாம் என்கிறார் டத்தோ டாக்டர் அ.சந்திரன்
D.K.U.N. PJK.
வாழ்க்கையே ஒரு தேடல் அதை தேடித்தேடியே மனசு அலைகிறது.
என்பதும் அவரின் தத்துவங்களை கொண்டிருக்கிறது.
பல சதாப்தங்களை வாழ்க்கையில் நாம் கடந்து வந்த போதிலும் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் தனியொரு மனிதனால்
மட்டுமே சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு தனது வாழ்வே அதற்கு
முன்னுதாரணமாக இருப்பதாக டாக்டர் சந்திரன் தெரிவித்தார்.
பல ஏமாற்றங்களை வேதனைகளை
வாழ்க்கையில் சந்தித்தவர் அதனைக்
கண்டு மனம் களங்காமல் கவனம்
சிதறாமல் தனது முழு கவனத்தையும்
கல்வியில் செலுத்தி படித்து வந்ததை
நினைவு படுத்திச்சொன்னார்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
குறள்:596.
உயர்வானவற்றையே எப்போதுழுதும்
நினைத்து முயலுதல் வேண்டும;
அவை தவறிப்போனாலும் அந்த எண்ணத்தைக் கைவிடக்கூடாது.
என்பது போல அந்த நேரத்தில் விட முயற்சியும் தன்நம்பிக்கையும்
தெய்வமும் தனக்கு துணையாக நின்றதை குறிப்பிட்டார்.
அதன் கருணை மட்டும் இல்லாமல் போயிருந்தால் இதனை எல்லாம் என்னால் சாதித்திருக்க முடியாது.
சில ஏமாற்றங்களை வாழ்க்கையில்
சந்திக்க நேரிடும் போது அதன் மனக்
காயங்களை நினைத்துக்கொண்டே
இருந்தால் நிகழ்கால வாழ்க்கையில் நம்மை நிம்மதி இழக்கச்செய்திடும்.
இதுவும் கடந்து போகும் என்றச் சிந்தனைக்கு மனதைப்பக்குவப்படுத்
திக்கொண்டால் எந்தவொரு ஏமாற்ற
த்தையும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறலாம் என்று கூறிய சந்திரன்,
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு
பின்னால் ஒருவரின் உழைப்பு இருக்கும் என்பார்கள் ஆனால், எனக்கு பின்னால் எனது அயராத உழைப்பு என்னுடன் நின்றது.சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்களே மனதில் மையமிட்டு நின்றதால் இத்துறையில் என்னால் தங்கப்பதக்கம் வாங்கி சாதனை படைக்க முடிந்ததாகவும் கூறினார் டத்தோ டாக்டர் சந்திரன்.
என் பிள்ளைகளுக்கும் நான் தான் Roll Model அவர்களும் என்னைப்
போலவே கல்வியில் தங்கப்பதக்கம்
வாங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்பழி குறள்: 226.
வறியவரின் கடும் பசியைத்தீர்க்க
வேண்டும்.அதுவே பொருள் உடையவனுக்கு அதைச்சேமித்து
வைப்பதற்குரிய இடமாகும்.
அவ்வாறு இருக்க 'தினமும் யாருக்கேனும் ஒரு சின்ன உதவி
செய்தால்தான் எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படும்.
இதை நெடு நாளாக கடைப்படித்து வருகிறேன். அப்படி ஒன்னும் செய்ய வில்லையானால் அன்றைய நாள்
எனக்கு மன நிறைவைதராது.
ஒரு விதமான மன உறுத்தல் இருந்துக்கொண்டே இருக்கும்
அதனால் முடிந்த வரை யாருக்காவது ஒரு சின்ன உதவிகளையாவது
செய்து விடுவேன் என்றார்.
அதோடு பணத்தை நிர்வகிப்பது எப்படி? என்ற வழி முறைகளை பலருக்கு கற்றுக்கொடுக்கிறேன்.
இந்த வழி முறைகளை பின்பற்றி
பலரும் முன்னேறியுள்ளதை
சந்திரன் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு,
தன்முனைப்பு பயிற்சிகள், தொழில் முனைவர்களை உருவாக்கும்
கருத்தரங்கம், மன நல ஆலோசனைகள் வழங்கும் சேவைகளை தற்போது நடத்தி வருவதோடு பொது நலச்சேவையில்
ஈடுபாடு காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
டத்தோ டாக்டர் A.சந்திரன் D.U.K.N PJK என்ற அடைமொழியுடன் நண்பர்கள்
நடுவே அறிமுகப்படுதப்படுகிறார்.
அவரின் சுய சரிதை வாழ்க்கை
உச்சத்திற்கு ஓர் அடையாளமாக
விளங்கி வருகிறது.
அ. சந்திரன் A/L அப்பள நாயுடு பெயர்: எஸ்.ஏ.ஜெய்ச்சந்திரன் புனைப்பெயர்: சந்துரு.
17/04/1967 பிறப்பிடம் மலாக்கா.
ஆரம்பப்பள்ளி (1974-1979) நெகிரி செம்பிலான்,தேசிய வகை பெர்த்தாங்
தோட்டத்தமிழ்ப்பள்ளி, இடைநிலைப் பள்ளி (1980-1985)- SM (L). Batu kikir NS. (1986-1987)- மெதடிஸ்ட் உயர்நிலைப் பள்ளி,சிரம்பான்.
(1988 - 1992 ) முதல் ஆசிரியராகப் பணியாற்றினார்.
மிடில்டன், பகாவ், செனமா தோட்டப் பள்ளிகளில் தொடக்கப்பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றிய போது
மிடில்டன் தோட்டம்,
தமிழ் இளைஞர் மணி மன்றத்திலும் பல சமூக பொது நலச்சேவையிலும்
அதிக ஈடுபாடு காட்டி வந்ததை
குறிப்பிட்டார்.
1992 - ஆசிரியர் பணியிலிருந்து
விலகி தனியார் துறையில் பணியை 17/4/1992 முதல் 20/2/2002 வரை Mahatsucitha Electric Com(M)Sdn. Bhd (சிலாங்கூர்) 1992- 2002 வரை வேலை செய்தவர்,
1992 முதல் 2002 வரை - பகுதி நேரப் படிப்பைத் தொடர்ந்தார்.(Logistic 1 மேலாண்மை 2) கிடங்கு மேலாண்மை 3) கொள்முதல் மேலாண்மை 4) வாங்கும் திறன் 5) கணினி திறன்கள் 20/2/2002 நிறுவனம் ஆட்குறைப்பு செய்யவும்,
ஜோகூருக்குச் சென்றவர், April 2002 முதல் April 2004 வரை செனாய் தொழிலாளர் சப்ளையர் அலுவலகம் (எம்பன் கரிஷ்மா)
மே 2004 முதல் ஜூன் 2007 வரை ஜெம்ப்ளஸ் எஸ்போரில் மூத்த நிபுணர் ஜூலை 2007 முதல் ஜூன் 2009 வரை கிளாசிக் அட்வாண்டேஜில் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸிகியூட்டிவ்,
ஜூலை 2009 முதல் மே 2014 வரை ஏடிஏ இண்டஸ்ட்ரீஸ் (எம்) பிஎச்டியில் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸிகியூட்டிவ். தளவாட மேலாண்மை இளங்கலைப்
பட்டம் பெற்றார். அதன் பிறகு
2012 பகுதி நேர படிப்பு. ஜூன் 2014 முதல் அக்டோபர் 2018 வரை செலஸ்டிகா எலக்ட்ரானிக் (எம்) எஸ்டிஎன் இன்வெண்டரி ஸ்பெஷலிஸ்ட் Bhd ,வணிக மேலாண்மையில் முதுகலைப்பெற்று ஜோகூர் மையத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியா 2014 பகுதி நேர படிப்பு. 2014 முதல் 2018 வரை படிப்பைத் தொடரவும் PhD. (DBA) வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், சரக்கு நிபுணர் பணியை விட்டு விலகினார்.
அக்டோபர் 2018 சுவிட்சர்லாந்தில் PhD பட்டம். அக்டோபர் 2018 பிரைட் ஸ்டார் ஹோம் மேனேஜ்மென்ட்டில் முதல்வராக பணியாற்றினார்.
ஜூன் 2018 பி.ஜே.கே. விருது,
ஜூன் 2019 (D.K.U.N) டத்தோ விருது
பெற்றார்.
ஆகஸ்ட் 2021 ஹை பிரைட் ஸ்டார் சர்வீசஸ் இயக்குநர்.
ஆகஸ்ட் 2021-ஆலோசகர்.
1.ஸ்பெக்ட்ரம் அனைத்துலக கல்லூரி,
2. கோலேஜ் யயாசன் பெலஜரன் ஜோகூர் (KYPJ),
3.கரிஸ்மா பல்கலைக்கழகம் ,
4.லிங்கன் கல்லூரி,
5.UMP டிசம்பர் 2023 MDRT (மில்லியன் டாலர் வட்ட மேசை)
அண்மையில் தமிழகத்தில் இவரின்
சேவைகளுக்கான அங்கீகாரமும்
(National Chakra Pride OF Nation, ISSR )
விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
மேன்மேலும் அவரின் சேவைகள்
தொடர Myvelicham .com My .nwes
My.Media தமது பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கொள்கிறது.
செய்தியாளர், ஆர்.எம்.சந்திரன்.
சாதனை மாமனிதர் - 3
-------------------------
G.குமார்
வறுமை நிலை மக்களின் குறைகளை குறைக்கும் குமார்
கலைத்துறையில் தமது 13 வது வயதில் ஆரம்பமானது. அண்ணன் ஒரு பாடகர் அவர் பார்வையற்றவர், பள்ளி முடிந்தவுடன் அவரை நான் தான் பாடல் ஒத்திகைக்கு அழைத்து போவேன் அண்ணன் மிகவும் நன்றாகப்பாடுவார் ஜொகூர் பாருவில் அவர் பிரபலப்பாடகர் என்று கூறினார் G.குமார்.
அவர் பாடுவதைப் பார்த்தப்பிறகு
எனக்கும் பாட வேண்டும் என்ற
ஆர்வம் வந்தாகக் கூறியவர்,
அப்போது எல்லாமே நேரடியாக இசைக்குழு தான்.ஒரு பனிரெண்டு பேராவது பின்னணியில் வாசிப்பார்கள் நான் உட்காந்து
பார்ப்பேன். எப்படி வாசிக்கிறார்கள்,
பாடுகிறார்கள் என்று அதன் பிறகே இசைத்துறையில் ஆர்வம் வந்தது
என்று கூறினார் குமார்.
அப்போது நாங்கள் தோட்டப்புறத்தில் வாழ்ந்தோம். அப்பா பெயர் கோவிந்தசாமி, அம்மா பெயர் தெய்வானை உடன் பி…
சாதனை மாமனிதர் - 4
------------------------
மாஸ்டர் ராஜேஷ்வரன்
வறுமை நிலையிலிருந்து வாழ்வை
வளப்படுத்திய மாஸ்டர் ராஜேஷ்வரன்
வாழ்க்கையில் எதையும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்களை உருவாக்கும் மனத்திட்பம் இருந்தால் எந்த விதமான தடைகளையும் எதிர் கொண்டு சமாளித்து முன்னேறலாம் என்பதற்கு மாஸ்டர் ராஜேஷ்வரன் ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்து எல்லாவற்றையும் இழந்து போனவருக்கு, ஒரு சீனரின் வழி காட்டலில் நம்பிக்கை இல்லாமல் போனவரின் வாழ்க்கையில் அங்குதான் அதிர்ஷ்ட தேவதை கண் திறந்து விட்டதாக மாஸ்டர்
ராஜேஷ்வரன் கூறினார்.
தோட்டப்புறத்தில் ரப்பர் பாலை அரைக்கும் வேலை செய்தவருக்கு,
நாற்பது காசு சம்பளம் கிடைத்தாகக்
கூறியவர்,
கொட்டாங்குச்சியில் தண்ணீர்
குடித்ததையும்,தாம் பெரிய படிப்பாளி
ஏதும் இல்லை சாதாரணமான தோட்டத்தொழிலாளி என்றும் த…
பீனிக்ஸ் பறவை - 1
-------------------------
டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி
மை ஹீரோ டத்தோ டாக்டர்
சுபத்திரா தேவி
மாண்புமிகு டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி குட்டன், குடும்பத்தில் மூத்தப்பெண் பிள்ளையாவார்.
கல்வியிலும் புறப்பாட நடவடிக்கையிலும் இளவயதிலேயே
அதிக ஈடுபாடு கொண்டவர்.
அதன் தாக்கம் மனதிலே வேரூன்றி நின்றதால் தனது 32 ஆவது வயதில் தமது சமூகச்சேவையை தொடர முன்
வந்ததாக கூறினார்.
சிப்பாங் ஒற்றுமை இலாகாவின் கீழ் இயங்கும் ருக்குன் தேத்தாங்கா இயக்கத்தின் மூலம் அவரது சமூகச்சேவை ஆரம்பமானது.
அதன் பிறகு, இந்தியா இளைஞர் மன்றம் வழி இந்தியா இளைஞர்களுக்கு பெண்களுக்கு
பல பயிற்சிகள் வழங்கினார்.
குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்களுக்கு சுய காலில் நிற்கும் கைத்தொழிலை கற்றுக்கொடுத்து
அவர்களது வாழ்வில் ஓர் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தினார்.
இந்திய இளைஞர் ம…
பீனிக்ஸ் பெண்கள் - 3
--------------------------
மகேஸ்வரி சுப்பிரமணியம்.
சாதனைகளையே தனது வரலாறாக பதிவு செய்து வருவதன் வழி வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று
நாயகி தலைமையாசிரியர் மகேசுவரி அவர்கள்.
உழைப்பே உயர்வு தரும் என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு செயல் படும் இவர் உள் நாடு மட்டுமின்றி பன்னாட்டு அளவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிக நீண்ட காலமாக பங்காற்றி வருபவர் தலைமையாசிரியர் மகேசுவரி அவர்கள்.
இலட்சிய எண்ணத்தோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்களிப்பு செய்து வந்தால் பல்வேறு வகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி இந்திய சமூகம் மறுமலர்ச்சி காணும் என்பது இவரது நம்பிக்கை.
மெந்தகாப், பகாங்கை பூர்வமாக கொண்ட இவர் ஆரம்ப கல்வியை தொடங்கியது மெந்தகாப் தமிழ்ப் பள்ளியில். இடைநிலைப் பள்ளியை முடித்து, இளங்கலை பட்டம் பெற்ற இவர் தனது முதுகலை பட்டத…
சிறந்த வாழ்க்கையை வடிவமைக்க நுட்பத்திறன் கல்வி உதவும் :
டத்தோ மூர்த்தி கந்தையா
கல்வித்தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்யாத மாணவர்கள் மனம் தளர வேண்டிய அவசியம் இல்லை. சிறந்ததொரு வாழ்க்கையை வடிவமைக்க நுட்டத் திறன் கல்வி உதவும் என்று
கூறினார் திவேட் பயிற்சியாளரும் ஒருங்கிணைப்பு குழுத்
தலைவருமான டத்தோ மூர்த்தி கந்தையா.
உலு சிலாங்கூர் நைகல் கார்டன் தோட்ட மண்ணின் மைந்தரான அவர், நைகல் கார்டன் 4 ஆம், பிரிவு தோட்டத்தமிழ்ப்பள்ளியில் கல்வி
பயின்றவர்.
தற்போது Pesiden Gabungan Pusat Latihan Kemahiran TVET India Malaysia வின் தலைமை பொறுப்பை வகிக்கும் டத்தோ மூர்த்தி,TVET மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நுட்பத் திறன் கல்வியைக் கற்றுக்கொண்டு
வாழ்க்கையில் முன்னேறியுள்ளதாக
குறிப்பிட்டார்.
SPM, தேர்வில் நல்ல தேர்ச்சியை
பெறாத மாணவர்களுக்கு…