டத்தோ மூர்த்தி கந்தையா

டத்தோ மூர்த்தி கந்தையா

சிறந்த வாழ்க்கையை வடிவமைக்க நுட்பத்திறன் கல்வி உதவும் :
டத்தோ மூர்த்தி கந்தையா

கல்வித்தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்யாத மாணவர்கள் மனம் தளர வேண்டிய அவசியம் இல்லை. சிறந்ததொரு வாழ்க்கையை வடிவமைக்க நுட்டத் திறன் கல்வி  உதவும் என்று
கூறினார் திவேட்  பயிற்சியாளரும் ஒருங்கிணைப்பு குழுத்
தலைவருமான டத்தோ மூர்த்தி கந்தையா.

உலு சிலாங்கூர் நைகல் கார்டன் தோட்ட மண்ணின் மைந்தரான அவர்,  நைகல் கார்டன் 4 ஆம், பிரிவு தோட்டத்தமிழ்ப்பள்ளியில் கல்வி
பயின்றவர்.

தற்போது Pesiden Gabungan Pusat Latihan Kemahiran  TVET India Malaysia வின் தலைமை பொறுப்பை வகிக்கும் டத்தோ மூர்த்தி,TVET மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இந்திய மாணவர்கள் நுட்பத் திறன்  கல்வியைக் கற்றுக்கொண்டு
வாழ்க்கையில் முன்னேறியுள்ளதாக
 குறிப்பிட்டார்.   

SPM, தேர்வில் நல்ல  தேர்ச்சியை
பெறாத மாணவர்களுக்கு, சிறந்ததொரு எதிர் காலத்தை  நிர்ணயிக்கும் ஆற்றல் இந்த நுட்பத் திறன் கல்விக்கு உள்ளது.  

தனியார்மய உற்பத்தித் திறனுக்கு அந்நியத் தொழிலாளர்களின்
மனித ஆற்றலை நம்பி இருக்கும் சூழ் நிலை உருவாகியுள்ளதும்,
 அதை நிறைவு செய்வதற்கு நுட்டத்திறன் கல்விக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதும்
சிறந்த எதிர் காலத்தை வடிவமைக்க நுட்பத்திறன் கல்வி இளைய
தலைமுறையினருக்கு
கை கொடுத்து உதவும் என்று டத்தோ மூர்த்தி கந்தையா தெரிவித்தார்.