தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சு நடத்தப்படும்! அமைச்சர் சிவகுமார்
HRDF Sivakumar

23 August 2023
கோலசிலாங்கூர் புக்கிட் ரோத்தான், தாமான் ராஜாவளி சுங்கை பூலோ தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்பு திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிடம்
பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
நான்கு தோட்டங்களை சேர்ந்த தோட்டப் பாட்டாளிகள் எதிர்காலத்தில் இதேடத்தில் குடியிருக்க வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் மனுவை வழங்கியுள்ளனர்.