தாய்மார்களுக்கு வருமானம் ஈட்ட உதவும் வணிக வழிகாட்டுதல் திட்டம் தொடர்கிறது

A business guidance program to help mothers earn an income continues

தாய்மார்களுக்கு வருமானம் ஈட்ட உதவும் வணிக வழிகாட்டுதல் திட்டம் தொடர்கிறது

ஶ்ரீ கெம்பாங்கன், 12 ஜூன் 2023

 வணிக வழிகாட்டுதல் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (B40) மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்கு வருமானம் ஈட்ட உதவும் வகையில் தொடர்கிறது.

சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளை (ஹிஜ்ரா) மூலம் சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாடு (சித்தம்) திட்டத்தின் கீழ் வணிகம் செய்ய அவர்களுக்கு வழிகாட்டுதலும் ஊக்கமும் அளிக்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு நிலை குழுத்தலைவர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

“பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சான்றிதழை மட்டும் பெறுவதை நாங்கள் விரும்பவில்லை, மாறாக அவர்கள் சித்தம் மற்றும் ஹிஜ்ரா வழங்கும் பிற திட்டங்களிலும்  கலந்து கொள்ளலாம்.

“இதில் சிலாங்கூர் இந்தியச் சமூகத்தின் பொருளாதார நிலைக்கு உதவக்கூடிய உபகரண உதவிகள் (மானியங்கள்), திறன் பயிற்சிகள், உற்பத்தி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவை அடங்கும்” என்று அவர் கூறினார்.

சாய் ராணி தையல் மையத்தில் நேற்று நடைபெற்ற “குரோ தையல்“ பயிற்சி சான்றிதழ், மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட  அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மேம்பாட்டு எஸ்கோ மூத்த செயலாளர் ஹனாபி சுடி, ஹிஜ்ராவின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி நோர்மைசா யாஹ்யா மற்றும் சித்தம் மேலாளர் கென்னத் சாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சித்தம் மூலம் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் பயிற்சி, வணிக வழிகாட்டுதல் திட்டம் மற்றும் வணிக உபகரண உதவித் திட்டம் (கிரான்) ஆகிய நான்கு தொழில் முனைவோர் திட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

www.myvelicham.com