15- க்கும் மாணவர்கள் குறைவாக உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடப்படும் என்று பிரதமர் கூறவில்லை.டத்தோ செனட்டர் நெல்சன் ரெங்கநாதன்...

The Prime Minister did not say that Tamil schools with less than 15 students will be closed down.

15- க்கும் மாணவர்கள்  குறைவாக உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடப்படும் என்று பிரதமர் கூறவில்லை.டத்தோ செனட்டர் நெல்சன் ரெங்கநாதன்...
15- க்கும் மாணவர்கள்  குறைவாக உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடப்படும் என்று பிரதமர் கூறவில்லை.டத்தோ செனட்டர் நெல்சன் ரெங்கநாதன்...

 16 June 2023 

15- க்கும் மாணவர்கள்  குறைவாக உள்ள தமிழ்ப்பள்ளிகளை மூடப்படும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்கள் அவ்வாறு கூறவில்லை என மஇகாவின் கல்விக் குழுத் தலைவர் டத்தோ செனட்டர் நெல்சன் ரெங்கநாதன் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சின் ஆதரவோடு மஇகா கல்விக் குழு ஏற்பாடு செய்திருந்த சந்திப்புக் கூட்டத்தில், 519 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தினை முடித்து வைத்த நாட்டின் பிரதமர் அவர்கள், மேற்கண்டவாறு கூறியதாக சொல்லி வருவது முற்றிலும் உண்மையல்ல.

இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மிகவும் பெருமைக் கொள்ளத்தக்கதாக உள்ளது என்றும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

எனவே, 15 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் கல்வி போதனை முறைகளும், அடிப்படை வசதிகளும் குறைவான நிலையில் இருப்பதால், நமது மாணவர்கள் முழுமையாக வசதிகளைப் பெற இயலாது எனவே, அவ்வாறு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்படலாம்.

அவற்றுக்கான போக்குவரத்து வசதிகள் கல்வி அமைச்சு ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையும் உள்ளது.

இதுபோன்ற 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்களைப் போன்று வசதிகளும். வாய்ப்புகளும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே கல்வி அமைச்சிடம் தாம் பரிந்துரை செய்திருப்பதாகவும் பிரதமர் அவர்கள் பேசும்பொழுதும் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில் 15க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப் பள்ளிகளின் உரிமங்களை வேறு இடங்களுக்கு அப்பள்ளிகளை.
குறிப்பாக அதிகமான இந்தியர்கள் வாழும் இடங்களுக்கு மாற்றிக் கொண்டுச் செல்வதற்கும் அரசும் மற்றும் கல்வி அமைச்சும் முறையான அனுமதி கொடுப்பதற்கும் தயாராக உள்ளதும் என்றும் அவர் கூறினார்.

எனவே, எந்தவொரு தமிழ்ப்பள்ளியையும் மூட வேண்டும் என்ற நோக்கத்தினை பிரதமரோ அல்லது கல்வியமைச்சோ கொண்டிருக்கவில்லை என   மஇகாவின் கல்விக் குழுத் தலைவர் டத்தோ செனட்டர் நெல்சன் ரெங்கநாதன் கூறினார்.