பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு சிலம்ப மாஸ்டர் டத்தோ சிவகுமார்- கவி மாறன் வருகை

Silambam Master Dato Sivakumar- Kavi Maran visits Bute Estate Tamil School

பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு சிலம்ப மாஸ்டர்  டத்தோ சிவகுமார்- கவி மாறன் வருகை

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு..

சிப்பாங்,சிலாங்கூர்.
23 Jun 2023, 

நேற்று காலை சிப்பாங் தொகுதியில் இருக்கும் பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு சிலம்ப மாஸ்டர்  டத்தோ சிவகுமார் அழைப்பின் பேரில் சென்று வந்தேன். அழகான செம்பனை தோட்டத்தில் எல்லா வசதிகளோடு 30 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

சுற்று வட்டார மக்கள்  இப்பள்ளியில் தங்களின் பிள்ளைகளை  சேர்க்கவும் அதோடு இப்பள்ளியில் படித்த முன்னால் மாணவர்களை ஒன்று சேர்த்து   அதன் வாயிலாக இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் ,
இந்த தகவலை சிப்பாங் சுற்று வட்டார மக்களுக்கு தெரியபடுத்த என்னை அழைத்து ஒரு கலந்துரையாடல் நடத்தினர்..
அதே நேரத்தில் 16 செப்டம்பர் மாதம் Hari Malaysia பொது விடுமுறை நாளன்று முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வொன்றினை ஏற்ப்படு செய்து வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்,வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம்,முன்னால் மாணவர் சங்கம் என அனைவரும் கலந்து  சிறப்பித்தனர்

.

சிப்பாங் மக்கள், பியூட் தோட்டத்தில் வசித்த முன்னால் மக்கள் அல்லது பள்ளியில் படித்த மாணவர்கள் ஒரு முறையாவது பள்ளிக்கு உங்களால் முடிந்த  உதவிகளை செய்ய நேரடியாக  வாருங்கள்பள்ளி தலைமை ஆசிரியர் தமது உரையில் கூறினார் . 

நீங்களும் உங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்பலாம் 3படம் அல்லது  - 1நிமிட வீடியோ  உங்கள் முழுப்பெயர்  தொடர்பு எண் email: myvelichamchennal @gmail.com  whats App 018-2861950