இணையம் வழி குப்பை அகற்றும் புகார் பயன்பாட்டில் சுமார் 100,000 பயனர்கள் பதிவு – கேடிஇபி கழிவு தகவல்

About 100,000 users registered on the Online Garbage Removal Complaint App – KDEP Waste Information

இணையம் வழி குப்பை அகற்றும்  புகார் பயன்பாட்டில் சுமார் 100,000 பயனர்கள் பதிவு – கேடிஇபி கழிவு தகவல்

23 ஜூன் 2023

 கேடிஇபி கழிவு மேலாண்மை (கேடிஇபிடபிள்யூஎம்) உருவாக்கிய இணையம் வழி  குப்பை அகற்றும் சேவை  மீதான புகார் செயல்பாட்டில் இப்போது சுமார் 100,000 பயனர்களைப் பதிவு செய்துள்ளது.

2022 இல் 36,800க்கும் அதிகமான புகார்களை ஐ-க்ளீன் சிலாங்கூர் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது என கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி பொது மேலாளர் கூறினார். 2021 இல் 30,949 புகார்கள் ஐ-க்ளீன் சிலாங்கூரால் தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி வரை, சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி திடக்கழிவு சேகரிப்பு தொடர்பான 14,718 புகார்களை கேடிஇபி கழிவு மேலாண்மை தீர்த்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

“புகார்களின் தீர்வு சிலாங்கூரில் உள்ள 12 நிர்வாக பகுதிகளில் குப்பை சேகரிப்பு சேவைகள் மற்றும் பொது சுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.