நிதியுதவி வழங்குவதாகக் கூறி இரண்டு முதியப் பெண்களை ஏமாற்றிய நபர் கைது

Man arrested for duping two elderly women on pretext of providing financial assistance

நிதியுதவி வழங்குவதாகக் கூறி இரண்டு முதியப் பெண்களை ஏமாற்றிய நபர் கைது

23 ஜூன் 2023:

 நிதியுதவி வழங்குவதாக கூறி இரண்டு முதியப் பெண்களை ஏமாற்றிய உள்ளூர் நபரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

கோலா சிலாங்கூரில் உள்ள கம்போங் அசாஹானைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவரிடம்  காரில் வந்த சந்தேக நபர் தன்னைப் உதவி வழங்கும் “தேங்கு ஜஃப்ருல்”.இன் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திய தாகக் புகார் அளிக்கப்பட்டது என கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டன் ரம்லி காசா கூறினார்.

பாதிக்கப் பட்டவரும் அவரது 72 வயது அண்டை வீட்டாரும் பொது மண்டபத்தில் பதிவு கூப்பன்களைப் பெறுவதற்காகச் சந்தேக நபரின் காரில் ஏறி சென்றுள்ளனர். ஆனால் அந்த சந்தேக நபர் இரு முதியவர்களையும் பெஸ்டாரி ஜெயா நகருக்கு அழைத்துச் சென்று பணமாக மாற்றி கொள்ள அவர்களின் நகைகளைக் கழற்றி கொடுக்கச் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த இரு முதியவர்களும் தோராயமாக RM8,100 ஏமாற்றப் பட்டுள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 30 வயதுடைய சந்தேக நபர் நேற்று மாலை வெற்றிகரமாகக் கைதுசெய்யப் பட்டதுடன், ஒரு கார், இரண்டு வளையல்கள், மூன்று மோதிரங்கள் மற்றும் அடகுப் பற்றுச்சீட்டு என்பனவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன .என கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிடெண்டன் ரம்லி காசா கூறினார்.