மாணவர்கள் விளையாட்டு உடையை அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி – கல்வி அமைச்சர்

Students allowed to go to school wearing sports clothes : Education Minister

மாணவர்கள் விளையாட்டு உடையை அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி – கல்வி அமைச்சர்

சுபாங் ஜெயா, 14 ஜூன் 2023

 மாணவர்கள் விளையாட்டு உடையை அணிந்து பள்ளிக்குச் செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

இதற்குக் காலக்கெடு எதுவும் இல்லை என்று விளக்கிய அவர், பின்னர் புதிய அறிவிப்பு வரும் வரை அமைச்சகம் அனைத்து தரப்பினருக்கும் இந்த நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது என்றார்.

“நாங்கள் மற்றொரு அறிவிப்பு வெளியிடும் வரை விளையாட்டு உடையை அணிந்து பள்ளிக்குச் செல்லலாம். நாங்கள் உங்களுக்கு அதை பற்றிய தகவல்களை அவ்வப்போது தெரிவிப்போம்.

“வானிலை இன்னும் வெப்பமாக இருக்கிறது, வானிலை சீராக மாறும் வரை இந்த நடவடிக்கையைப் பின்பற்றலாம், ”என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

மாணவர்களின் பெற்றோருக்கு இந்த நடவடிக்கை நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என ஃபத்லினா நம்புகிறார். மேலும் அவர்களில் சிலர் வானிலையின் நிலைமை மேம் பட்டாலும் இதை தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறார்கள்.

கடந்த மே 3 ஆம் தேதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உடல்நலப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக, வெப்பமான காலநிலையில் பள்ளிக்கு விளையாட்டு உடையை அணிய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியது.

சீருடையில் இருக்கும் மாணவர்கள் கழுத்து பட்டை அணிய தேவையில்லை