காணாமல் போன ஐந்து வயது சிறுமி பலவீனமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

A five-year-old girl who went missing is found in a frail state

காணாமல் போன ஐந்து வயது சிறுமி பலவீனமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

ஜார்ஜ் டவுன், மே 30: கடந்த மே 26 ஆம் தேதி தாமான் கோலா மூடா, பெனாகாவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி பிறகு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஐந்து வயது சிறுமி 24 மணி நேரத்திற்குப் பிறகு பலவீனமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் உள்ள பெர்மாதாங் கெரியாங்கில் உள்ள புதர் பகுதியில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

“அடுத்த நாள் மாலை 6 மணியளவில் சிறுமி பலவீனமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பரிசோதனைக்காக கெப்ளா பதாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்..

“தாடை உடைந்த காயங்கள், கன்னம் மற்றும் தலையின் பின்புறத்தில் காயங்கள், மார்பு மற்றும் உடலின் பின் புறத்தில் காயங்கள் மற்றும் இரண்டு உடைந்த பற்கள் என பரிசோதனை முடிவில் தெரிய வந்தன” என்று அவர் கூறினார்.

அக்காயங்களுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும், காவல்துறையினர் இன்னும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் ஏதும் தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு கோரியதாகவும் காவ் கூறினார்.

Olikkathir Sethigalodu Enainthirunggal Myelichamtv Unggal Broadband Channel

www.myvelicham.com Geneation Young News Portal