சிலாங்கூர் குடிமக்கள் பங்கேற்கக் கூடிய பயிற்சித் திட்டத்தை நாங்கள் முன் வைப்போம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

Training program where selangor citizens can participate

சிலாங்கூர் குடிமக்கள் பங்கேற்கக் கூடிய பயிற்சித் திட்டத்தை நாங்கள் முன் வைப்போம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

ஷா ஆலம், மே 9: அமெரிக்காவின் போஸ்டனில் செயல்படும்  டசால்ட் சிஸ்டம்  சர்வதேச  நிறுவனத்துடன் சிலாங்கூர் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) சமீபத்தில் கையெழுத்திட்டது.

சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம், உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின், குறிப்பாக கார்களின் திறன்களை ஆராயும் வாய்ப்பை மாநில அரசுக்கு அளிப்பதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இந்த ஒத்துழைப்பின் மூலம் பலவற்றை ஆராயவும், போதுமான மற்றும் தொழில் திறன் மிக்க  மனித வளத்தை உருவாக்கவும் முடியும்.

“மலேசியர்கள், குறிப்பாகச் சிலாங்கூர் குடிமக்கள் பங்கேற்கக் கூடிய பயிற்சித் திட்டத்தை நாங்கள் முன் வைப்போம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் பதிவேற்றிய ஒரு வீடியோ மூலம் கூறினார்.

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவில் நடந்த முதலீட்டு மாநாடு மற்றும் பல கருத்து விளக்க அமர்வுகளில் பங்கேற்க மலேசியாவில் 11 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தூதுக்குழுவிற்கு அமிருடின் தலைமை தாங்கினார்.

அமெரிக்க வர்த்தகத் துறை மற்றும் கலிஃபோர்னியா கவர்னர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள முதலீடு கூட்டத்தில் அமிருடின் மற்றும் டிரேட் எஸ்கோ டத்தோ தெங் சாங் கிம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.