நிலைமை கை மீறுவதற்குள் நடவடிக்கை எடுப்பீர் முதன்மருக்கு (பிரதமர்) தமிழர் தேசியப் பேரவை வலியுறுத்து
The Prime Minister is urged by the Tamil National Council.
Date : 13 March 2026 News By: தமிழ்த்திறன் செல்வநாதன்
நாட்டின் அமைதி, இன, மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயலாற்றிக்கொண்டு இருக்கும் தமிம், பிர்டாவுசு வோங், இருடுவான் தீ, சந்திரா மற்றும் சம்ரி வினோத் ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசியத் தமிழர் தேசியப் பேரவைத் தலைவர் தமிழ்த்திறன் செல்வநாதன் வலியுறுத்தினார்.
தன்னை “நில ஆர்வலர்” எனக் கூறிக்கொள்ளும் தமிம், தமிழ்ச் சமய அடையாளமன சூலத்தை காலால் மிதிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றது. இத்தகைய செயல்கள் சமய உணர்வுகளைப் புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருக்குரானை மிதித்தாலும் அல்லது சூலத்தை மிதித்தாலும் அல்லது எந்த மதத்திற்கும் பண்பாட்டிற்கும் தொடர்புடைய மதிக்கப்படும் அடையாளங்களை அவமதித்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். ஆகவே, இன அல்லது மத வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வகையான அத்துமீறிய மற்றும் பொறுப்பற்ற செயல்கள் சமூகத்தில் அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். நிலைமை கட்டுக்குள் இருக்கவும், நாட்டின் அமைதியும் இன ஒருமைப்பாடும் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசாங்கம் விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும், நாட்டின் அமைதியும் நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தமிழ்த்திறன் செல்வநாதன்
தலைவர்



ganapathy







\
