"“மலேசியாவில் தற்கொலை செய்தி வெளியீட்டில் பொறுப்பான அணுகுமுறை தேவை”

“A responsible approach is needed in reporting suicide news in Malaysia.”

Date:10 June 2026 News By:Ganapathy

  200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் தொழில்முனைவோர் தற்கொலை தொடர்பான செய்திகளை பாதுகாப்பாக, நெறிமுறையுடன் மற்றும் பொறுப்புடன் வெளியிடுவதற்கான தேசிய உறுதிமொழியை ஒப்பமிட்டுள்ளனர். இது பொதுச் சுகாதாரத்தைச் சார்ந்த நுணுக்கமான செய்தி வெளியீட்டில் செய்தியறை நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தீர்மானமாகும்

.

இந்த உறுதிமொழி மலேசிய ஊடக கவுன்சில், தேசிய மலேசியாவில் தற்கொலை தொடர்பான செய்திகளை பொறுப்புடன் வெளியிட தேசிய உறுதிமொழிக்கு ஊடக அமைப்புகள் ஆதரவு,   பத்திரிகையாளர்கள் சங்கம், மற்றும் கபுங்கன் கிளப் மீடியா மலேசியா ஆகியவற்றின் பிரதிநிதிகளால் “தற்கொலை செய்தி வெளியீடு: பாதுகாப்பான செய்தியறை வழிகாட்டி” என்ற நிகழ்ச்சியில் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சி மலேசிய தகவல் மற்றும்மல்டிமீடியா உள்ளடக்க மன்றம் (CMCF) மற்றும் மலேசிய சுகாதார அமைச்சின் தேசிய மனநலம் சிறப்புத் துறை (NCEMH) இணைந்து புத்ராஜாயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடத்தப்பட்டது.