தொழில் முனைவர் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா

தொழில் முனைவர் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா

தொழில் முனைவர் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா

Date:27 April 2026    News By: Guna Penang 

உலக அமைதிக்கும் இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் தலைமை ஏற்க வேண்டும் என டத்தோ பி.குணசேகரன் அறைகூவல் விடுத்துள்ளார். 

அமெரிக்கா - ஈரான் இடையிலான சர்வதேசப் பதற்றத்தைத் தணிக்க, பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது ராஜதந்திர வலிமையைப் பயன்படுத்த வேண்டும் என நெகிரி செம்பிலான், செரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி.குணசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

​செபராங் ஜெயாவில் நடைபெற்ற பாராட்டு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய அமெரிக்கா - ஈரான் மோதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதனால் மலேசியாவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். 

கடந்த காலங்களில் அண்டை நாடுகளின் எல்லை மோதல்களைத் தீர்ப்பதில் பிரதமர் ஆற்றிய பங்கை நினைவுகூர்ந்த டத்தோ பி.குணசேகரன், தற்போதைய உலகப் பதற்றத்தைத் தணிக்கவும் பிரதமர் சமாதானத் தூதுவராகக் களமிறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

​இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய மலாக்கா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் 'தெக்குன்' (TEKUN) மற்றும் கூட்டுறவு ஆணையம் வழியாக இந்தியச் சமுதாயத்திற்காக 220 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இந்தியத் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரப் பங்குதாரர்களாக உயர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
​டத்தோ பி.குணசேகரன், டாக்டர் சிங்கப்பூர் சின்னையா, டாக்டர் ஜோபினா நாயுடு வருகை நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.

​பினாங்கு மாநில உரிமைக் குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக சிங்கை தொழில் முனைவர் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா மற்றும் டாக்டர் ஜோபினா நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், மலாக்கா முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வழங்கினர்.