10 ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி இயக்குனர்  நியமனம் இல்லை ஏன்?

10 Years, No Assistant Director for Tamil Schools!

10 ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி இயக்குனர்  நியமனம் இல்லை ஏன்?

Date:14May 2026 News    By: Rajamanikkam   

 கடந்த  04.05.2026- ஆம் திகதி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் செயலவை உறுப்பினர்கள் மலேசியக் கல்வி அமைச்சின் துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு  வோங் கா வா அவர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தினர்.

இச்சந்திப்பானது, புத்ரா ஜெயாவில் உள்ள கல்வி துணை அமைச்சரின் அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் , பள்ளி இடமாற்றம், இணைக்கட்டிடம்,
தாமதிக்கப்பட்ட புதிய  பள்ளிக் கட்டிடம் , புதிய பள்ளி கட்டுமானத்திற்கு நிலம் கோரிக்கை பாலர் பள்ளி என
 மொத்தம்  46 தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான நிலைப்பாடுகள் விவாதிக்கப்பட்டன.
கல்வி துணை அமைச்சரும் இக்கூட்டத்தில் பல நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா மாநிலத்தில் 2016 - ஆம் ஆண்டு முதல் இன்று வரை ( 10 ஆண்டுகள் ) தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி இயக்குனர்  நியமனம் செய்யப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்பதை துணைக்கல்வி அமைச்சரிடம்  தெரிவிக்கப்பட்டது. மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவின்  இந்த நடவடிக்கையினால்
தமிழ்ப் பள்ளிகள் சார்ந்த ஒரு பதவி உயர்வு, அதிலும் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓர் உயர்ப்பதவி ஓரங்கட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பல நிர்வாக சிக்கல்களையும் இது ஏற்படுத்துகின்றது. மேலும் இந்நடவடிக்கையினால் தமிழ்ப் பள்ளிகளின் தொடர் வளர்ச்சி, தமிழ்ப்பள்ளி மாணவர்களின்  கல்வி வளர்ச்சி தடை பட்டு வருகின்றது என்பதையும் இக்கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.

 மேலும், SPM தேர்வில் நன்னெறிப் பாடம் தொடர்பான மாணவர்களின் தேர்ச்சி முடிவுகுறித்தும் பேசப்பட்டது. இது குறித்து ஒரு சில பரிந்துரை களும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலைக் கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ

நன்னெறிப் பாடத்தை விருப்பப் பாடமாகப் படித்து, தேர்ச்சி ( guru opsyen moral ) பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே அப்பாடத்தைப் போதிக்க வேண்டும் என்ற பரிந்துரை முதன்மையானதாக அமைந்தது.

 

POL வகுப்பு செயல்பட  குறைந்தது 15 மாணவர் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டு 10 மாணவர்கள் இருப்பின், தாய் மொழி வகுப்புகள் செயல் படக் கல்வி அமைச்சருடன் பேசுவேன் என்ற பிரதமரின் வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கருத்துரைக்கப்பட்டது.

Share whats App Groups :www.myvelicham.com