TVK 107 இடங்களுடன் தனிப்பெரும் வெற்றி வெற்றி !

"TVK won in all 16 constituencies in Chennai."

TVK  107 இடங்களுடன் தனிப்பெரும்  வெற்றி வெற்றி !

Date: 05 May 2026   News By : Ganapathy 

 

TVK 107 இடங்களுடன் தனிப்பெரும் கட்சி  வெற்றி

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று (04-05-26) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 234 தொகுதிகளில், இரவு 10 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இக்கட்சி 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 11 இடங்களில் முன்னிலை வகித்து மொத்தமாக 107 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.