கோலாலம்பூர் ஜாலான் சுங்கை பிசியில் வீட்டிருக்கும்  அருள்மிகு ஸ்ரீ மஹா பகவதி அம்மன்

At home in Jalan Sungai Besi, Kuala Lumpur Arulmigu Sri Maha Bhagavathi Amman

கோலாலம்பூர் ஜாலான் சுங்கை பிசியில் வீட்டிருக்கும்   அருள்மிகு ஸ்ரீ மஹா பகவதி அம்மன்

Date:24 April 2026

 

அருள்மிகு ஸ்ரீ மஹா பகவதி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னை அருள்மிகு ஶ்ரீ மஹா நாக பகவதி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று 19/4/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது, இந்த விழாவுக்கு ஏறக்குறைய 200 பேர் பக்த மெயன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருளாசி பெற்றார்கள், மற்றும் சிறப்பு வருகையாக  இந்து சங்க தேசிய தலைவர் தங்க கணேசன் அவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கூட்டரசு பிரதேச இந்து சங்க துணை தலைவரும்,மலேசியா தேசிய காப்பாகத்தின் இயக்குனருமானதிருமதி கௌரி தங்கய்யா அவர்களும், சமூக சேவையாளரும், பொது நல தொண்டருமான டாக்டர் கே. ஸ். பாஸ்கரன், மற்றும் பொது மக்கள் யாவரும் கலந்து கொண்டார்கள். இந்த கும்பாபிஷேகம் விழா முழுவதும்ஆலயத்தின் பெண் பக்தர்களே ஏற்பாடு செய்து மிகவும் சிறப்பாக நடத்தினார்கள் என்று ஆலயத்தின் தலைவரும் ஆன்மீக தொண்டருமான  தவத்திரு அம்மா தாயம்மா தெரிவித்தார்கள்