ம.இ.கா. SPM மேட்ட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு – கல்வி அமைச்சரை சந்தித்தனர்
“MIC discussed SPM matriculation quota – met with the Minister of Education.”
Date: 07 May 2026 News By: Sivasubramaniam
கல்வி தொடர்பான ம.இ.கா. கோரிக்கைகள் நேற்று ம.இ.கா கல்வி அமைச்சரை Fadhlina Sidek நேரில் சந்தித்து பாடவிபரங்களை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.
டத்தோ’ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் (ம.இ.கா. துணைத் தலைவர் மற்றும் கல்வி பிரிவு தலைவர்) டத்தோ’ ஸ்ரீ டாக்டர் தேவமணி எஸ். கிருஷ்ணசாமி (முன்னாள் பிரதமர் துறை அமைச்சர், ம.இ.கா. சார்பில்) டத்தோ பி. கமலநாதன் (முன்னாள் கல்வி துணை அமைச்சர், ம.இ.கா. சார்பில்) சிவசுப்ரமணியம் லெட்சுமணன் (ம.இ.கா. CWC Member
மேட்ரிகுலேஷன் திட்டம் – இட ஒதுக்கீடு SPM தேர்வில் சிறந்த முடிவுகளை பெற்ற இந்திய மாணவர்களுக்கு மேட்ட்ரிகுலேஷன் திட்டத்தில் சேர வாய்ப்பு அளித்ததற்கு கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் குறைந்தது 2,000 இந்திய மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர வாய்ப்பு பெற்றிருந்தனர். அதனால், 9A-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு மேட்ட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் ம.இ.கா. கோரிக்கை விடுத்துள்ளது.
POL (People’s Own Language – தமிழ்) வகுப்புகள் தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகவும், மலேசிய இந்தியர்களின் முக்கிய மொழியாகவும் உள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, குறைந்தது 10 மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் POL வகுப்பு தொடங்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில்: வகுப்பு வழங்கப்படவில்லை, அல்லது
வழங்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வ நேர அட்டவணையில் இடம்பெறவில்லை, நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், தமிழ் POL வகுப்புகள் அதிகாரப்பூர்வ நேர அட்டவணையில் உடனடியாக இடம்பெறவும், நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படவும் வேண்டும் என ம.இ.கா. கோரியுள்ளது
.
SPM முடிக்காத மாணவர்களுக்கு TVET கல்வி பல இந்திய மாணவர்கள் SPM தேர்வுக்கு பதிவு செய்திருந்தாலும், தேர்வை எழுதவில்லை. சிலர் நான்காம் வகுப்பு (Form 4) முதல் பள்ளியை விட்டு விலகியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு TVET கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ம.இ.கா. வலியுறுத்தியுள்ளது.
இதனால், ம.இ.கா. கல்வி பிரிவு, மேட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு, தமிழ் POL வகுப்புகள், மற்றும் TVET கல்வி வாய்ப்பு ஆகியவற்றை மலேசிய கல்வி அமைச்சின் கவனத்திற்கும் பரிசீலனைக்கும் சமர்ப்பித்துள்ளது.
www.myvelicham.com / www.myvelichamtv.com



ganapathy







\
