மருந்தகப் பணியாளர்கள் வாய்ப்பு இப்போது இல்லை ஜோசப் செபாஸ்தியன்
Pharmacy Staff Vacancy is not available now Joseph Sebastian
News by:RM Chanran
29 August 2024 - மருந்தகப் பணியாளர்கள் வாய்ப்பு இப்போது இல்லை
ஜோசப் செபாஸ்தியன்.
முன்னாள் மருந்தகப் பணியாளர்கள் பணி நம்மை வியக்க வைக்கிறது. எல்லாப்பணியாளர்களும் தற்போது 70 வயது நிரம்பியவர்கள் அனைவரும் ஒன்றிணைத்தப் பெருமை பாவலர் ஜோசப் செபாஸ்தியன் அவர்களை சேரும்.
அவர்கள் அனைவரும்1975 ஆம் ஆண்டு மருந்தகப்பிரிவில் (Farmasi)
சேர்ந்துவேலை செய்ததாக தங்களின் அனுபவங்களை பரிமாறிக்கொண்டனர்.
மருந்தகப் பிரிவு என்பது முற்றிலும் ஆங்கிலத்தில் திறமை பெற்றவர்கள்
மட்டுமே செய்யமுடியும் ஒரு காலத்தில் அரசாங்க மருத்துவமனையில் நம்மவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதற்கு இவர்களே முன்னுதாரணமாக விளங்குகின்றனர்
.
அதோடு இவர்கள் ஆங்கிலத்திலும் சரளமாக பேசுபவர்களாக உள்ளனர் அதனால் இவர்கள் அனைவரும் மருந்தகப் பிரிவிலும் மற்ற அரசு துறையிலும் தங்களின் முத்திரையை பதித்திருப்பது தெரிகிறது.
தற்போது மருந்தகப்பிரிவில் நம்மவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. அந்த வாய்ப்புகள் இப்போது இல்லை என்றே கூற வேண்டும்.
இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணிகளைச்செய்த பாவலர் ஜோசப் செபாஸ்தியன் கூறினார்.
www.myvelicham.com