ஜொகூர் மாநில எதிர் ஆனியின் இந்திய வேட்பாளர்கள் களம் இறக்க படுவர்களா!?
opposition alliance’s Indian candidates be fielded in the Johor state elections?”
13 JUNE 2026 NewsBy: Achandrasegaran
ஜொகூர் பாரு, ஜூன் 12 –
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் மாநிலத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த முறை, இதற்கு முன் இல்லாத அளவிற்கு எதிர் ஆனியில் அதிகமான இந்திய வேட்பாளர்கள் களத்தில் களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்காத்தான் ஹராப்பான், பெரிக்கத்தான் நேஷனல்,பாஸ்,ரிசொட் என அனைத்து கூட்டணிகளுக்கு களம் இறங்குகின்றன.
ரபிஸி ரம்லியுடன் தொடர்புடைய பெர்சாமா அணியும், டத்தோ ஹம்சா ஜைனுடின் தலைமையிலான ஒரு புதிய கூட்டணியும் தேர்தல் களத்தில் தோன்றலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது

.
அதேவேளையில், பிகேஆர் இரண்டு இந்திய வேட்பாளர்களையும், ஜசெக முதல் முறையாக இரண்டு இந்திய வேட்பாளர்களை களமிறக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மலேசிய இந்திய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிடவும், பாஸ் ஒரு தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு டத்தோ ஹம்சா ஜைனுடின் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜொகூர் பெர்சத்து சயாப் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவராக செயல்பட்ட டத்தோ தன் லேக் காங் தலைமையிலான அந்த அமைப்பு கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை டத்தோ ஹம்சா ஜைனுடின் தலைமையிலான புதிய அணி உருவானால், அந்த கூட்டணியின் சார்பில் சந்திர சேகரன் மற்றும் பூபாலன் ஆகிய இரு இந்திய வேட்பாளர்கள் போட்டியிடும் வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதாக ஜொகூரிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
மொத்தத்தில், ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், நாட்டிலுள்ள இந்தியர்களின் கவனமும் இந்த முறை ஜொகூரை நோக்கித் திரும்பியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.



ganapathy







\
