தமிழ் பள்ளிகளுக்கு தொடர்ந்து நான்  சேவை செய்வேன். யாரும் என்னை தடுக்க கூடாது.

Federation of Alumni Associations of Malaysian Tamil Schools – Penang.”

தமிழ் பள்ளிகளுக்கு தொடர்ந்து நான்  சேவை செய்வேன். யாரும் என்னை தடுக்க கூடாது.

Date:10 June 2026 News By: Velyutham permata penang 

பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ் பள்ளிகளுக்கு மாநில பேரவை A4 தாட்களை வழங்கி அப்பள்ளிகளின் அன்றாட கல்வி கேல்வி நடவடிக்கைகளுக்கும் மற்றும் அதன் அலுவலக நிர்வாகத்துக்கும் உதவியது. இந்த உதவி இரண்டாவது ஆண்டாக கடை பிடிக்க பட்டது

.
. தேசிய ரீதியில் நடைபெற்ற இராமனுஜம் கணித போட்டியின் பினாங்கு மாநில  வெற்றியாளர்களுக்கு ( பினாங்கு மாநில தமிழ் பள்ளி மாணவர்கள் ) பதக்கங்கள்  வழங்கப்பட்டன. 
 எஸ். பி. எம் 2025 தேர்வில் மிக சிறப்பாக தேர்வு பெற்ற பினாங்கு மாநில பேரவையின் உறுப்பினர்கள் 2 பேரின் பிள்ளைகளுக்கு சன்மானம் தலா RM 500.00 ( Cash Voucher ) வழங்கப்பட்டது.
டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜு சோமு அவர்களின் சொந்த செலவில் இரண்டு B 40 வசதி குறைந்த மாணவர்களுக்கு மடி கணினி ( Lap Top ) எடுத்து வழங்கினார்.
டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு அவர்களுக்கு " தமிழ் பள்ளிகளின் அரண் " எனும் பட்டம் பேரவையினால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும் அவரை " இயக்கத்தின் " காப்பாளராக " நியமனம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேசிய பேரவையின் தலைவர் திரு. குமரன் மாரிமுத்து மற்றும் உதவி தலைவர் திரு. விஜய் வேலாயுதம் பினாங்கு மாநில பேரவையின் ஆண்டு கூட்டத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

புதிய இரண்டு சங்கங்கள் முறையே சங்க பதிவு இலாகவின் அதிகாரப்பூர்வ பதிவுடன் பெர்தாமா பேரவையில் இணைந்தன. 
 முன்னாள் மாணவர் சங்கம், பழனியாண்டி தமிழ் பள்ளி, கப்பாளா பாத்தாஸ், பட்டர்வொர்த்
முன்னாள் மாணவர் சங்கம், லாடாங் செம்பா தமிழ் பள்ளி, தென் செபெராங் பிறை.

டத்தோ சுந்தரராஜு உரை:
- தமிழ் பள்ளிகளுக்கு தொடர்ந்து நான்  சேவை செய்வேன். யாரும் என்னை தடுக்க கூடாது.
- அனைத்து பினாங்கு தமிழ் பள்ளிகளில் பூஜை அரைகள் உருவாக்கம் பெறும்.