அன்வாரே சிறந்த ஆட்சியாளர்
Visionary Leadership
Date: 02 July 2026 News By:
அன்வாரே சிறந்த ஆட்சியாளர்
மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய யுகத்தை ஏற்படுத்திய கட்சி என்றால் அது கெஅடிலான் கட்சிதான்.
Reformasi என்றழைக்கப்படும் மறுமலர்ச்சி இயக்கம்தான் பின்னாளில் புதிய எழுச்சியாக உருவெடுத்த கெஅடிலான் கட்சியாகும்
.
அரசியலில் பழிவாங்கப்பட்டு 24ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க போராடிய தலைவர்தான் டத்தோஸ்ரீ அன்விர் இப்ராஹிம்.
நாட்டின் 10ஆவது பிரதமரான (PMX) அன்வார் ஆட்சியில் ஏறிய பிறகுதான் மலேசியாவின் நன்மதிப்பு உலக நாடுகள் மத்தியில் பிரசித்துப் பெற்றது என்பதை மறுக்க முடியாது.
ஒரு போராட்டவாதியாக, இயக்கத் தலைவராக, இளைஞர் தலைவராக உருவெடுத்த அன்வார் பின்னாளில் மாபெரும் சகாப்தமாக நாட்டை வழிநடத்துவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்
.
இப்படி அரசியலில் பலம் வாய்ந்த, சக்தி மிகுந்த அன்வார் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வழிநடத்தி வருகிறார்.
திறமையான நிர்வாகத்தை வழிநடத்தும் அன்வார், இம்முறை ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வரலாற்றை படைப்பார் என்று தெரிகிறது.
நாட்டு மக்களின் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் உணர்ந்த தலைவராக அன்வார் இருப்பதால்தான் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை நீடித்து வருகிறது.
ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் அன்வார் தலைமையிலான பக்காத்தான் கூட்டணி வெற்றிதான் எதிர்காலத்தில் மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
அன்வார் நாட்டை வழிநடத்தி வந்தபோதிலும், எல்லா மாநில அரசாங்களையும் அவர் வேறுநாடு பார்க்காமல் செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் அன்வார் நாட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளுக்கான அறிவிப்புகளே ஒரு சான்றாகும்.
அரசியலிலும் நாட்டு வளர்ச்சியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவரான அன்வார் இப்ராஹிம் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.



ganapathy







\
