உள்ளூர் தொழில்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிபாட்டை வெளிப்படுத்தினார் எஸ்.வீரப்பன்.

S. Veerappan expressed the government's commitment to promote local industry.

உள்ளூர் தொழில்துறையை மேம்படுத்தும்  அரசாங்கத்தின் உறுதிபாட்டை  வெளிப்படுத்தினார் எஸ்.வீரப்பன்.

News By:Ganapathy 

13 Sept 2024  - உள்ளூர் தொழில்துறையை மேம்படுத்தும்  அரசாங்கத்தின் உறுதிபாட்டை  வெளிப்படுத்தினார்

எஸ்.வீரப்பன். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் முன்னணி நிறுவனமான (Linsum Engineering Sdn Bhd,  MBAM ONE BUILD) கண்காட்சியை அறிமுகப்படுத்தியது.  இந்த நிகழ்வை ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினமான மாண்புமிகு வீரப்பன் சுப்பரமணியம் தொடக்கி வைத்தார்.

சிவில் இன்ஜினியரிங் துறையில் புத்தாக்க வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உள்ளூர் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை 
 வெளிப்படுத்தினார். 

தொழில்துறை சவால்களுக்கு பல்வேறுதுறை, நம்பகமான தீர்வுகளை வழங்குவதற்கும் பரந்த அளவிலான பயன்பாட்டிற்கும் கட்டுமானத் துறையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது . இந்தக் கண்காட்சி தொழில்துறை வல்லுநர்கள், பங்குதாரர்கள், பிரதிநிதிகள் கவனத்தை ஈர்த்தது என்று கூறினார் எஸ்.வீரப்பன்.

 இன்ஜினியரிங் மூலம் தொழில் அல்லது கட்டுமானத் துறைக்கு இந்த அமைப்பின் முக்கியத்துவம் பயன்பாடு பற்றி விளக்கமும் அளிக்கப்பட்டது என்றார்.  இந்நிகழ்வில் (Syarikat Linsum Engineering Sdn. Bhd ) இன் தலைமைச் செயல் அதிகாரி Ybhg DatoM.Shatiskumar,கட்டுமானத்துறை வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.