இந்திய சமுதாயம் பெரிக்காத்தானில் இல்லை. எங்களுக்கும் உங்களை விட்டால் வேறு பிரதமர் இல்லைதான் Tan ஸ்ரீ விக்னேஸ்வரன்...
Tan Sri S.A Vigneswaran is the future of Indian society and the goal of educational development.
ஷா ஆலம்.10 Junee 2023
ஒற்றுமை அரசு அமைந்த பின்னர் இந்திய சமுதாய எதிர்காலமும் , அதன் கல்வி மேம்பாடு இலக்கும் என்ற மாநாடு சா ஆலமில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் மெட்ரிக்குலேசன் கல்வியில் இந்திய சமுதாயத்திற்கு 2,500 இடங்கள் தேவை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை வைத்தார்.
மித்ராவின் சார்பில் ஷா ஆலமில் இந்திய சமுதாய எதிர்காலமும், அதன் கல்வி மேம்பாடு இலக்கும் என்ற வரலாற்று பூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
ஏம்ஸ் கல்லூரிக்கு நிதி அளித்தற்கு நன்றி கூறினார். மேலும் இன்று பெரும்பான்மையான இந்திய சமுதாயம் தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். இருப்பினும் வசதி குறைந்த இந்திய மாணவர்கள் இன்னும் தோட்டப் பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் தங்கி படிக்க முழு வசதி கொண்ட பள்ளிகள் தேவை என்றார். தமிழ் பள்ளி விவகாரங்கள் பிரச்னைக்கு தீர்வு காண உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மெட்ரிகுலேஷன் படிக்க இந்திய மாணவர்களுக்கு 1,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த இடங்கள் இந்திய சமுதாயத்திற்கு போதாது. எங்களுக்கு கூடுதலாக 2,500 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார்.
கடந்த அரசு கொண்டு வந்த மலேசிய இந்தியன் புலு பிரிண்ட் திட்டம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இந்திய சமுதாயத்திற்கு எதிராக சொஸ்மா சட்டம் கொண்டு வரக்கூடாது. போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அச்சட்டத்தில் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் படுபவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழுமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்திய சமுதாயம் சொஸ்மா சட்டத்தில் கீழ் தண்டிக்க வகை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய சமுதாயம் ஒரு காலத்தில் 1.5% சொத்துடைமை வைத்திருந்தது. துன் மகாதீர் காலத்தில் சொத்துடைமையிலும் இந்திய சமுதாயம் வீழ்ச்சி கண்டு விட்டது
.
இந்திய சமுதாயத்தின் சொத்துடைமை 3% உயர்த்தப்பட வேண்டும். இதற்கு மித்ரா முன்னணியாக பங்காற்ற வேண்டும். இந்திய சமுதாயத்தின் சொத்துடைமை உயர்த்துவதில் சிறப்பு அமைச்சரவை குழு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்தில் செலவிட முடியாமல் போனது. இந்நிதி ஏறக்குறைய 400 மில்லியன் ரிங்கிட். இந்நிதி ஒரு அற நிறுவனத்தின் கீழ் ஒதுக்கி வைக்கப் பட வேண்டும். இந்நிதியை அதன் அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டும் என்று தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இந்திய சமுதாயம் பெரிக்காத்தானில் இல்லை. எங்களுக்கும் உங்களை விட்டால் வேறு பிரதமர் இல்லை. ஆகவே எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டார்.