என் பெயரை ஓவியர்  லேனா என்று மாற்றி உலகறிய பெருமை சேர்த்த அமரர் ஆதியே.

The people of the garden sang my praises to the painting ... Painter Lena

என் பெயரை ஓவியர்  லேனா என்று மாற்றி உலகறிய பெருமை சேர்த்த அமரர் ஆதியே.

22 Nov 2024  News By; RM Chandran 

என்னுடைய இயற்பெயர் லெட்சுமன் பிறந்தது கிள்ளானுக்கருகில் உள்ள மிடலண்ஸ் தோட்டம் (பல கலைஞர்களை உருவாக்கிய தோட்டம் ) நான் படித்தது ஆங்கில பள்ளி Primary High School Klang, 

 பிறகு இடைநிலை பள்ளி LA  SALLE Klang அப்போது கிள்ளான் வட்டார பள்ளிகள் நடத்திய ஓவிய போட்டிகளில் என் பள்ளியை பிரதிநிதித்து என் ஓவியம் அந்த  interschool போட்டிக்கு அனுப்பப்படும் பிறகு என் ஓவியம்.

 முதல் தேர்வாகி என் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் அதைவிட பெருமை அந்த ஓவியத்தை என் சக மாணவர்கள் எல்லா வகுப்பறைக்கும் கொண்டு சென்று காண்பித்து மகிழ்வது போவார்கள்  மற்றொரு இளமைகால நினைவு என்னை ஓவியனாக்கியது.

நான் பிறந்த தோட்டத்தில் அப்போது புதியதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலில் நான் வரைந்த லெட்சுமி ஓவியம் உருபெற தோட்டத்து மக்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரமே என் புகழை பாடியது அது போக ஒரு நாள் மாலை பொழுது பலர் முன்னிலையில்  மலர் மாலை பொன்னாடை சூடி  பாராட்டு நடந்தது .

என் இளமை கால நண்பர்கள் டத்தோ சிவலிங்கம் வே. மா அர்ஜுனன் வேனுகிருஷ்ணசாமி .  சீரிய நாதன் பத்மநாபன் இப்படி பலர் என்னருகில் இருந்தனர்.

என் பள்ளி படிப்பை முடித்த பிறகு 5 வருடம் அத்லோன் புக்கிட் செராக்கா தோட்டத்தில் குமாஸ்த்தாவக (estate clerk)  வேலையில் சேர்ந்தேன் அந்த காலகட்டத்தில் கடுமையான ஒவ்வாமையின் காரணமாக அதாவது ஆஸ்த்மா நோய்யின் கடுமையினால் அந்த வேலையிலிருந்து நான் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்ப்ட்டது சுமார் ஒரு வருடம் வேளை இல்லா திண்டாட்டம் இந்த காலகட்டத்தில் என்னுடைய மதிப்பிற்குறிய  செனரல் மேஜர் முன்னால் GM
B.F. McDonald  Bukit Mertajam மில் இருப்பதை அறிந்து அவரை நாடினேன்  அதற்கு முன்பாக வட மலாயாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்  Tan Sri K R.SOMASUNDRAM அவரையும் வேளை விசையமாக சந்தித்தேன் அப்போது அங்கே வேளை காலியாக இல்லாததால் பிறகு பார்ப்போம் என்று மிக அன்பாக வழியனுப்பினார் அப்போது எனக்கு வயது ( 24 ) 1972ல் என் ஓவிய திறமையை அறிந்த 
திரு.MC.Donald என்னை London க்கு அனுப்பி ஓவியத் துரையில்  படிப்பை மேற்கொள்ள எல்லா செலவையும் தோட்டமே ஏற்றுக்கொள்ளும் என்று என்னிடம் பரிந்துரைத்தார் அதை ஏற்க மறுத்ததேன்  காரணம்  அப்போது ஆஸ்த்மா ஒரு இடைஞ்சலாக இருக்க மறுத்துவிட்டடேன் அதன் பிரதி பலனாக அவர் மனைவியின் திரு உருவ ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து கொடுத்தேன் அதை அவர் மனைவி இருக்கும் ஐயர்லாண்டுக்கு
( ireland) அனுப்பி பெருமை பாராட்டியதை என மனம் நினைத்து பார்த்து நெகிழ்வு போகிறது
பிறகு 1980 ல்  ஆங்கில பள்ளி ஆசிரியரை திருமணம் செய்துகொண்டேன் 3 பிள்ளைகள் பிறந்தார்கள்!

பகுதி நேர ஓவியனாக தமிழ் முரசு , தமிழ் மலர், சங்கமணி, புதிய சமுதாயம் வானம்பாடி Preston , Dewan Bahasa dan Pustaka, Titiwangsa publisher,Uma Publications,Jaya bakti,Longmans இந்த காலகட்டத்தில்தான்  புக்கிட் பிந்தாங்கில் உள்ள Bukit Bintang  Malaysian Arts Institute ல்  பகுதி நேர வகுப்பில் art diploma பெற்றேன் அப்போது  Imbi roadல் வசித்தேன். 
முழு நேர ஓவியனாக தமிழ் ஓசையில்  2 வருடம் நல்ல உயிரோட்ட மான கற்பனை ஓவியஙகளையும் நாட்டு நடப்பை பற்றிய அரசியல் தலையங்க கார்ட்டூன்களை முதல் பக்கத்தில் இடம் பெற செய்தது என் ஓவியத்திற்குதமிழ் 
சிறப்பு  சேர்த்தவர் அமரர் தமிழவேள் ஆதி குமணன் அவர்கள் அது மட்டுமா என் பெயரை ஓவியர்  லேனா என்று மாற்றி உலகறிய பெருமை சேர்த்த அமரர் ஆதியே  ! 

தமிழ் ஓசை அந்த காலகட்டத்தில் பல போராட்டங்களை சந்தித்து அரசியல் சூழ்ச்சிகள் ஒரு புறம் 
பொருளாதார சிக்கல்கள் ஒரு புறம் இருந்தாலும்  எப்படியோ தினசரி தவறாமல் வந்துவிடும் காரணம் வேளை செய்த அனைவரும் விசுவாசிகள் உயிரையே பனயம் 
வைத்தவர்கள் ஆதி மீதி அன்பு கொண்டவர்கள்! 
தூதன் மாத இதழுக்கு தாவினேன்
ஆதி அவர்கள் எவ்வளவோ தடுத்தார் அவரை மீறி வந்தது இன்று கூட என் நெஞ்சத்தில் பெரும்  வடுவாக ஆராத புண்ணாக்கு உள்ளது .தமிழ் நேசனில் நான்   

 [8:09 pm, 04/10/2024] My News My Media: (ஆராத புண்ணாக உள்ளது)  பிள்ளை மனங்கொண்டவர் கபடு சுது அறியாத வெள்ளை மனமுடைய நீதிமானாக நம்மோடு வாழ்ந்த மாமனிதர் ஆதிகுமணன்.
வருடம்1985  என்று நினைக்கிறேன் தமிழ் நேசன் ஓவியர் கிருஷ்ணாவின் இறப்பிற்கு பின் அங்கே ஓவியருக்கான ஒரு வாய்ப்பு என்னை தேடி வந்தது என் ஓவியங்கள் நேசன் உரிமையாளர்களான  மகளிர் மாமணி இந்திராணி அவர்களும் மாண்புமிகு துன் சாமிவேலு அவர்களும் என் ஓவியத்தை பாராட்டவும் இரசிக்கவும் செய்தார்கள் அதுவே இன்று என் வளர்ச்சிக்கு வழிகோலியது . அடுத்து என்னிடத்தில் மிதமிஞ்சிய ஒரு திறமை கொட்டி கிடந்தது அதுதான் POLITICAL CARICATURE
அரசியல் கேலி சித்திரம் இந்த என திறமையை மாண்புமிகு துன் அவர்கள் அவருடைய அரசியலுக்கு நன்கு பயன்படுத்தி கொண்டார்கள் அவருடைய அரசியல்
எதிரிகள் என் கார்ட்டூனை பார்த்து
அசந்து போனார்கள் இதை நான் மிகை படுத்தி சொல்வதாக பொருள் படாது! எனக்காக எழுதப்பட்டதோ .......
 ஒரு ஓவியனுக்கு இருக்க வேண்டிய கற்பனை திரன் ஓவிய நுனூக்கங்கள் வர்ணங்களை தீட்டும் வழிமுறைகள்
இயற்கை காட்சியாகட்டும் உருவபடங்களாட்டும் 
எடுத்தயெடுப்பிளே வரையும் என் திறமையை பார்த்து மெய்மறந்து போய் பல மேடைகளில் பாராட்டவும் செய்தார் 
அது என்னை தமிழ் நாட்டிற்க்கு அனுப்பி பட்ட படிப்பு செய்ய அனுப்பினார் என்றால் அவர் என்னை எந்த அளவுக்கு கலைஞனாக மதித்தார் என்பதை எப்படி பாராட்டுவது. 
1990ல் தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டேன் அங்கே ஒரு ஓவிய கல்லூரியில் நான் படிக்க வேண்டும் அதுவும் 2 வருடம்  Advance Study முடிக்க வேண்டும் அந்த கால கட்டத்தில் என் மனைவியோ ஆசிரியர் 3  பிள்ளை வயது குறைந்தவர்கள் தாய்  இவர்களை எப்படி நான் வரும்வரை பார்க்க முடியும் என்ற ஒரு குறை என்னை குடைய ஆரம்பித்தது.
 Taj coramentel சென்னையில் உள்ள பெரிய ஹாட்டல் Tun Samy Vellu அவர்கள் உடனே என்னை அழைக்கிறார்
 அவரை சந்தித்தேன் அங்கே தமிழ் நாட்டின் கல்வி அமைச்சர் திரு. துரைமுருகனும் எனக்காக காத்திருந்தார் உடனே அறிமுகம் செய்து வைத்த மறுகனமே அங்கே நான் பட்டப்படிப்பு செய்ய ஓவிய கல்லூரியில் எனக்காக இடம் கொடுக்க வேண்டினார் ஆனால்
பிறகு பயிற்சி காலம் எனக்கு சரிவராது என்பதை உணர்ந்த நான் இந்த விபரத்தை சொல்ல போக அவர் சற்றும் எதிர்பார்க்காத பதிலை கேட்டு அவர் என் மீது கடும் கோபம் கொண்டு இதற்கு மேல் உங்க பசால்ன்னு சொல்லிவிட்டார் அதன் பிறகு எப்படியோ சமாதானப்படித்து என் வழிக்கே விட்டுவிட்டார்.  தமிழ் நாட்டில் தங்கி சிறந்த ஓவியரிடம் பயிற்சிப்பெற்றேன் அந்த கால கட்டத்தில் சிறந்த விளங்கி ஓவியர்கள் பலரை சந்தித்தேன் R மாதவன், ஜி கே மூர்த்தி புது கோட்டை ஓவியர் ராஜா JP கிருஷ்ணா, உபால்டு , கோபுலு இன்னும் பலருடைய நட்பையும் அனுபவங்களை பெற்றேன். தமிழ்நேசன் என்னை வேலையில் இருந்து தூக்கியது சில பொய்யான தகவல்களை காட்டி  நான் பலிகடாவானேன். 
அந்த காலகட்டத்தில் இருவர் என்னை நன்கு உணர்நதவரகள் என் திறமையை பதித்தவர் ஓருவர் அமரர் ஆதி குமணன்
மற்றொருவர் மதிபிற்குறிய டான் ஸ்ரீ கே ஆர் சோமசுந்தரம் இருவருமே என்னை அவர்களின் பதிப்பககத்தில் ஏற்றுகொள்ள அழைப்பு வந்தது அந்த வகையில் வந்த வாய்ப்பு தான் நான் தற்போது wisma tun sambanthan ஆஸ்தான ஓவியராக பனியில். 
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நால்வர்  துன் சாமிவேலு கே ஆர் சோமசுந்தரம் டத்தோ சகாதேவன் ஆதி குமணன்