ஏன் சிவனுக்கு வில்வம் மட்டும் இவ்வளவு ஸ்பெஷல்?

Why is Villvam LEAF so special to Shiva?

ஏன் சிவனுக்கு வில்வம் மட்டும் இவ்வளவு ஸ்பெஷல்?

Date:30 Jan 2026  News By: Maran Tamil Nadu

ஏன் சிவனுக்கு வில்வம் மட்டும் இவ்வளவு ஸ்பெஷல்? இதோ அதன் பின்னணி!

ஹிந்து மதத்தில் வில்வமரம் என்பது மிகவும் புனிதம் வாய்ந்ததாகவும் சிவபெருமானுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. திங்கட்கிழமை எப்போதும் சிவனுக்கு உரிய நாளாக இருக்கிறது , அதன் காரணமாக அந்த கிழமை சோமவார் என்றும் கூட அழைக்கப்படுகிறது.

அந்த நாளில், சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலைகளை அர்ப்பணித்து வழிபாடு செய்வதால், அவர் மனமிறங்கி பக்தர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வார். உலகம் முழுக்க எத்தனையோ மரங்கள் இருந்தாலும் சிவபெருமானுக்கு வில்வ மரத்து இலைகள் எதனால் மிகவும் பிடித்தமானது? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண கதையும் உள்ளது.