'மீண்டும் பள்ளிக்கு செல்லலாம்' பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ் வில்
back to school' Dato Seri Sundraraju somu
05 Jan 2026 News By: Kalaimany Penang
'மீண்டும் பள்ளிக்கு செல்லலாம்' கல்வி புரட்சி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு அவர்கள் , அவரது தொகுதியான பிறையில் நேற்று முந்தினம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
பிறை, சை லேங் பார்க் பொது மண்டபம் நிறைந்து காணப்பட்ட மக்கள் கூட்டத்தில், தமிழ்ப்பள்ளிகள் மலாய்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகளின் மாணவர்கள் என மூவின மாணவர்கள் அடங்கிய சுமார் 250 மாணவர்கள்,
பள்ளி உபகரணங்களுக்கான நூற்று ஐம்பது வெள்ளி பற்றுச்சீட்டுகளை டத்தொஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பிறை தொகுதியிலுள்ள 8 பள்ளிகளுக்கு மொத்தம் 37,500 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளை மாணவர்கள் பெற்றுகொண்டனர்.

மாணவ மணிகளின் பெற்றோர்களுக்கு இவ்வுதவியானது அவர்களது நிதிச் சுமையை குறக்க உதவும் என்பதையறிந்து தாம் இத்தகைய உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ அவர்கள், இது போல் இன்னும் பல நிதியுதவிகளை தாம் அவ்வப்போது செய்து வருவது மனதிற்கு நிறைவை அளித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, பள்ளி பிள்ளைகளின் செலவினங்களை குறைக்க, டத்தோ ஸ்ரீ வழங்கியுள்ள நிதியுதவிக்கு தாங்கள் நன்றி கூறுவதாக பல பெற்றோர் கருத்து கூறினர்.
இந்நிகழ்வில் பல இன தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.



ganapathy







\
