டெத் விஷ் காப்பி - இதுவே காப்பியின் சுவை
Death Wish Coffee is praised for its strong flavor profile, featuring dark chocolate and black cherry notes, while surprisingly having less bitterness compared to other dark roasts.

Dated: 3.6.2025 Time : 8.40 pm Translated Copy
இது மொழிப் பெயர்க்கப்பட்ட ஒரு கட்டுரை.
This is a translated article.
இன்று உலகம் முழுவதும் காப்பியை மிகவும் விரும்பி அருந்துபவர்கள் உள்ளனர். இதற்காக உலகளவில் காப்பி உற்பத்தியாளர்களும் உள்ளனர். இதன் தொடக்கக் காலம் என்று பார்த்தால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே உலகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் காப்பி மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவைவிட, பிரேசில், ஹவாய் நாட்டில்தான் அதிகமாக உற்பத்தி செய்து வருகிறது. எனவே, காப்பி உற்பத்திச் செய்யும் நாட்டிற்கு காப்பி விரும்பிகள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தென் அமெரிக்க நாடானா பிரேசில் கடந்த 2024 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், பிரேசியல் உலக காப்பி உற்பத்தில் 38% சதவிகிதம் முதலிடத்தில் உள்ளது.
இந்த நாடு ஆண்டுதோறும் 66.4 மில்லியன் 60 கிலோ கிராம் காப்பிக் கொட்டைகளை (அதாவது சுமார் 8.78 பில்லியன் பவுண்டுகள் காப்பிக்கு சமம்) உற்பத்திச் செய்கிறது. காப்பியின் உற்பத்தி நாடு அதன் சுவைப் பற்றி நிறையவே சொல்ல முடியும். பிரேசிலிய காப்பி பெரும்பாலும் குறைந்த அமிலத் தன்மை மற்றும் அடர்த்தியின் காரணமாக அதிக சுவைகளைக் கொண்டுள்ளது.
ஆனால் பிரேசிலின் இந்தச் சாதனையை எந்த நாடும் நெருங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முதல் பத்து காப்பி உற்பத்தி செய்யும் நாடுகளைப் பார்த்தால், காபி எவ்வளவு உலகளாவிய நிகழ்வு என்பதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான நுண்ணறிவைக் கொண்டு அறியலாம்.
யட்நாமை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தென்கிழக்கு ஆசிய நாடான இது தனக்கென ஒரு காப்பி கலாச்சாரத்தையேக் கொண்டுள்ளது, மென்மேலும் சுவைத்துப் பார்க்குஙட முயற்சிளைக் கொடுக்கிறது. காரணம் என்னவென்றால், பற்பல சுவையான காப்பிகளை அதற்கான சுவைகளையும் இந்நாடு கொண்டுள்ளது.
மேலும், இந்நாடு பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் காப்பி உற்பத்தியில் உள்ளது. இது உலக உற்பத்தியில் மொத்தம் 17% சதவிகிதம் ஆகும். இந்த எண்ணிக்கை, பிரேசிலின் பெரிய உற்பத்தியை விடக் குறைவாக இருந்தாலும் கூட, ஒப்பீட்டளவில் பார்த்தோமானால், குறைவான பரப்பளவைக் கொண்ட ஒரு நாட்டிற்கு 17% சதவிகிதம் என்பது கணிசமான உற்பத்தி என்றுதான் கூற வேண்டும். இந்நாட்டிற்கு இதுவொரு ஒரு பெரிய சாதனைதான்.
இந்தோனேசியாவின் ஜாவாவும் உலக காபி உற்பத்தியில் 6% சதவிகிதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்கா நாடும் அவ்வாறுதான்!
அடுத்து, எத்தியோப்பியா மற்றும் உகாண்டா முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. உலகின் மிக வலிமையான காப்பியை உற்பத்திச் செய்யும் காப்பிக் கொட்டைகள் உட்பட, பல வகையான காப்பிக் கொட்டைகளையும் இந்த கண்டங்களில் பார்க்க முடியும். காப்பியின் உலகம் எந்தளவுக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதனை இது தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது.
கடந்த காலத்தில் வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு ஃபோல்ஜர்ஸ், மேக்ஸ்வெல் ஹவுஸ் மற்றும் இன்ஸ்டன்ட் காப்பிக் கொட்டைகள் கிடைப்பது மிகவும் குறைவாகவே கிடைக்கப் பெற்றன. ஆனால், இப்பொழுது நிலமை அவ்வாறு இல்லை. காப்பிக் கொட்டைகளின் வகைகள் மற்றும் உற்பத்திகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. கனவு காண முடியாத பலவகையான கொட்டைகள் சந்தைகளை இந்நாடுகள் உருவாக்கியுள்ளன.
உதாரணமாக, கோலா மற்றும் சாக்லேட் சுவையுடைய அல்லது சிறந்த ஒயின் சுவைக் கொண்ட பல்வேறு ரகங்களை இன்று சந்தைகளில் பார்க்கலாம்!
காப்பி குடிப்பது அலாதியானது. சுகமானது. இதன் சுவையை அறிந்து கொண்டால் அதனை விட இயலாது. இதன் குறைபாடு என்னவென்றால், சொல்லப்போனால் - சிறந்த காபி கொட்டை பிராண்டை தினமும் காய்ச்சுவது கடினமாக இருக்கலாம்.
சுவையுள்ள, அடர்த்தியான காபியை விரும்புவோருக்கு, காப்பிக் கொட்டையின் தேர்வு மிகவும் முக்கியமானதாகும். உங்களது காலைப் பொழுது ஒரு கோப்பை காப்பி பல நன்மைகளைத் தருகிறது. அவற்றில் முதன்மையானது ஜவா காப்பி என்கிறார்கள். அதன் திகட்டாதச் சுவையால். ஆன்லைன் விமர்சகர்களும் கூறியுள்ளதாகக் அறியப்படுகிறது. இந்தக் காப்பியை காலையில் தொடங்கத் தேவையான உடனடி ஊக்கத்தை விரைந்துப் பெறுவதாகக் கூறுகிறார்கள். அதிகாலையில் அலாரம் அடிக்கும்போது, ஏற்படும் சோம்பலைத் தணிக்க - வலியைக் குறைக்க அல்லது ஒரே தாவலில் ஒரு உயரமான கட்டிடத்தை எட்டிப் பிடிக்கத் திறனைக் கொடுக்கக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுக்க விரும்பினால், காப்பியாகத்தான் இருக்கும் என்றார்கள்.
இருப்பினும்,எவ்வகைக் காப்பிலும் சுவையில் இது குறைவில்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும், மற்ற அடர்த்தியான வறுக்கப்பட்ட காப்பிப் பிராண்டுகளை இந்த காப்பி மிகவும் குறைவான கசப்புடன் இருப்பதாக பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெத் விஷ் காபி - அதன் திகட்டாதச் சுவைக்குப் பின்னால் டார்க் சாக்லேட் மற்றும் கருப்பு செர்ரியின் சுவையினைக் கொண்டுள்ளது.
இதனை வேறு விதமாகவும் கூட கூறலாம். இது தனியாக அருந்தும் போதும் சுவையாக இருக்கும், கருப்பு காப்பி குடிப்பவர்களுக்கு இது மிகவும் பிடித்தமானதாக இருக்கும், ஆனால் சிறிது கிரீம் மற்றும் சர்க்கரை சேர்த்தாலும் அதன் சுவையை அதிகமாகவே வெளிப்படுத்தும்.
இந்த காபி கொட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு தொகுதிகளாக வறுக்கப்படுகின்றன, இதனால் எப்போதும் ஒரு புதிய தயாரிப்பு கிடைப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்படுகிறது. பேக்கெட்டுக்களில் வறுத்த தேதி மற்றும் "best by" தேதியும் கூட முத்திரையிடப்பட்டுள்ளது, இந்த வறுவல் உண்மையில் ஆர்டர் செய்து தயாரிக்கப்பட்டது என்பதை காப்பி பிரியர்களுக்கு அறிந்திருப்பது நல்லது.
காப்பி கடல் போன்றது - நீந்துவது மிகவும் எளிதானது. நீங்கள் ஒரு காபி கடலில் நீந்த வேண்டியிருந்தால் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் அதில் மூழ்கிப் போகவும் நேரிடலாம். நீந்துவதற்கு இவ்வளவு காபி இருக்கிறது –
காப்பியை குடிப்பதில் கீரிடத்தைக் கொண்டிருக்கும் காப்பி பிரியர்களே! மனதிற்கும் – உடலுக்கும் இனிமையான ஓர் புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியைத் தரும் உங்களுக்கும் விருப்பமான காப்பி ஒன்று இருக்க வேண்டுமே!



ganapathy







\
