2025ஆண்டு சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தைப்பூச வசூல் ரிங்கிட் மலேசியா 514,976.50

2025 Sungai Pattani Sri Subramania Swamy Devasthanam Thaipoosa Collection Ring.M. 514,976.50

2025ஆண்டு சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தைப்பூச வசூல் ரிங்கிட் மலேசியா 514,976.50

Date; 12 March 2025 News By; Anbarasan sg petany  

சுங்கைபட்டாணி மார்ச் 12- இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின்  தைப்பூச விழாவினை முன்னிட்டு அதன் மூலம் ,கிடைக்கப்பெற்ற  மொத்த வசூல் 514,976.50 என தேவஸ்தான நிர்வாகம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
இந்த ஆண்டு தைப்பூச விழாவில் 20,921 பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி வந்ததாகவும்,12 இரதக் காவடிகளும்,4,375 அர்ச்சனை சீட்டுகளும்,563 காவடிச் சீட்டுகளும்,2715 முடிக்காணிக்கை சீட்டுகளும் .தகவல் மையத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற  நன்கொடை  ரிங்கிட் மலேசியா. 14,956 எனவும்
அதோடு தனிநபர்  நன்கொடைகள்,உபயம் சங்காபிஷேகம் ,பொருள்கள் ஏலம்,உபயங்கள் என ஆக  மொத்த வசூலாக  ரிங்கிட் மலேசியா 514,976.50  கிடக்கபெபெற்றதாக  தேவஸ்தானத்தின் பொருளாளார் ந.பத்மநாதன் தெரிவித்தார்.

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின்  107ஆம் ஆண்டு தைப்பூசம் சிறப்பாக நடைபெற்றதற்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் சிறப்பாக அமைந்ததாக   தேவஸ்தானத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் தெரிவித்தார்

.
மாடானி அரசாங்கத்தின்  பிரதமரின் அரசியல் செயலாளர் ச்சான் மிங் காய்,கெடா மாநில மந்திரி பெசாருக்கும், அவரது இந்திய பிரிவின் அந்தரங்கச் செயலாளார் பி.கே.குமரேசனுக்கும்,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஓங் சியா சேனுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்ட  அவர் தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், நன்கொடையாளர்களுக்கும்  அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் பலத்த பாதுக்கப்பினை வழங்கிய கெடா மாநில காவல் துறை அதிகாரி மற்றும் கோல மூடா மாவட்ட காவல் துறையினருக்கும் அதன் உயர் அதிகாரிகளுக்கும்,  உபயக்காரர்களுக்கும் தொண்டர்களுக்கும்,ஹிந்து பணிப்படை குழுவினருக்கும்,இந்து சங்கம் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள்,கெடா மாநில வட்டார  இந்து தர்ம மாமன்றத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள்,பொது இயக்கத் தலைவர்கள்,ஆஸ்ட்ரோ நிறுவனம்,டிஜி நிறுவனம்,  சுங்கைபட்டாணி 'கிளின் தைப்பூச'  அரசு சார்பற்ற இயக்கம்,பட்டாணி ஜெயா காற்பந்தாட்ட குழு,கோலமூடா லயன்ஸ் கிளாப்பக்தர்கள்,சுற்று வட்டார ஆலய நிர்வாகத்தினர் அனைவருக்கும்  அரசு சார்பற்ற இயக்கத்தினருக்கும், தமது நன்றியினைத் இராஜேந்திரன் தெரிவித்துக் கொண்டார்.
www.myelicham.com / face book /You tube/Tik Tok/ Intg / google