நடப்பு தலைவர்கள் பலர் தோல்வி ஜாலிஹா முஸ்தபா.
Many current leaders fail Jaliha Mustafa.

Date :24 April 2025 News By: Rm Chandtan
பிகேஆர் கட்சியின் செலாயாங், ஜெம்போல் மற்றும் சிலாம் மூன்று தொகுதிகளில் மறு தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.
அண்மையில் கட்சித் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட பலரின் புகார்களைத் தொடர்ந்து, இந்த மூன்று தொகுதிகளிலும் மறுதேர்தல்கள் குறித்த ஊகங்களுக்கு ஜாலிஹா பதிலளித்தார்
.
உயர் பதவிகளில் உள்ளவர்களின் தோல்விகள் குறித்து வினவியபோது, “இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், தேர்தல் குழு இன்னும் வெற்றிப் பெற்றவர்களின் இறுதிப் பட்டியல்உறுதிப்படுத்தப்படவில்லை அவர் கூறினார்.
பிகேஆர் துணைத் தலைவர் Nik Nazmi Nik Ahmad, பிகேஆர் இளைஞர் பகுதி தலைவர் Adam Adli மற்றும் கே. சரஸ்வதி தோல்வியடைந்துள்ள நிலையில், இத்தேர்தலில் உறுப்பினர்களால் அதிகம் அறியப்படாத நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கணினி மேம்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர்களின் கருத்துகள் கிடைக்கப் பெற்ற பின்னர், தற்போது பயன்படுத்தும் முறையானது மிகவும் சிறப்பானவை என்று ஜாலிஹா குறிப்பிட்டார்.
www.myvelicham.com