கூகுள் அலுவலகத்தில் தமிழ்மொழி அலுவலக மொழியாக (Official மொழி) அங்கீகரித்துள்ளது

Tamil language in Google Office Official language (official language) Approved

கூகுள் அலுவலகத்தில் தமிழ்மொழி அலுவலக மொழியாக (Official மொழி) அங்கீகரித்துள்ளது

04 April 2025 News By: GanapathyKrishnasamy MyNews My Media 


அண்மையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் – தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவலக மொழியாக அங்கீகரித்துள்ளது. 

இது உலகமெங்கும் வாழும் தமிழ்க்குடி மக்களுக்கு இதுவொருரு மகிழ்ச்சியான செய்தியாகும். 

தாய்த் தமிழை ஓர் உயர்தனிச் செம்மொழி என்று கூறலாம். எந்தவொரு மொழியுடனும் சாராமல் அது தனித்து இயங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வது மிகவும் எளிதானது என்பதுடன், இதன் பொருளை காரணப் பெயர்களோடு மிக எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி என்பதால், பன்னாட்டு ஆய்வாளர்களும், உலக மொழி அறிஞர்களும், செம்மொழி என்று பெயர் சூட்டி தனித்து நிற்கச் செய்துள்ளனர்

தமிழ் மொழியில் பல அயல்நாட்டுக்காரர்களும் தமிழின் இனிமையைப் புரிந்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தமிழகத்திலேயே தங்கி பல இலக்கண நூல்களையும், செய்யுங்களையும் எழுதியுள்ளனர். 

சுறுங்கச் சொன்னால், தமிழ் மொழியின் சிறப்பைக் கூறுவதற்கு வார்த்தைகளும் இல்லை – வரிகளும் இல்லை என்றே கூற வேண்டும்.

www.myvelicham.com Face book  MyNews My Media